நெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்

மோசமான மொபைல் நெட்வொர்க் மற்றும் சீரற்ற கவரேஜூடன் நீங்கள் போராடுகிறீர்களா? மோசமான கனெக்டிவிட்டியால் தொழிலில் இழப்புகளை சந்திக்கிறீர்களா அல்லது அவசர கால சூழ்நிலையில் உங்கள் மொபைல் நெட்வொர்க்கால் ஏமாற்றமடைந்திருக்கிறீர்களா? நல்லது, இதோ மேற்கண்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறை!

கடந்த 1990-ம் ஆண்டின் நடுப்பகுதியில் மொபைல் போன்கள் இந்திய சந்தையில் நுழைந்தபோது, அதன் சேவை, விலை உயர்ந்ததாக இருந்தது.

வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை பற்றி ஏன் அதிக அளவில் பேச வேண்டியுள்ளது தெரியுமா? உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுள்ள VoWiFi தொழில்நுட்பம் மொபைல் சிக்னல் இல்லாத நிலையிலும்கூட பயனர்களை கனெக்டட்டாக வைத்திருக்கும். பொதுவாக வைஃபை அழைப்பு எனப்படும் VoWiFi, மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத மொபைல் பிளாக்ஸ்பாட் பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மேற்கொள்வதையும், ரிசீவ் செய்வதையும் சாத்தியமாக்குகிறது. வைஃபை கனெக்சன் மூலமாகவே அழைப்பு மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை (SMS & MMS) அனுப்பவும், பெறவும் அனுமதிக்கிறது. இந்த சேவையை 43 நாடுகளில் 70 ஆபரேட்டர்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் ஏர்டெல் முந்திக் கொண்டுள்ளது.

இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவதோடு, வீட்டில் வைஃபை வசதியை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் உட்புற கவரேஜ் பிரச்னையை தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக வைஃபை அழைப்புகள், குறைந்த அளவு டேட்டாவை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. 5 நிமிட அழைப்புக்கு 5 MB டேட்டாவை விட குறைவாகவே பயன்படுத்துகிறது. மேலும் இது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், எந்தக் கூடுதல் ஆப் இல்லாமல், லாக்-இன், நம்பர் என எக்ஸ்ட்ரா தேவை ஏதுமின்றி, தெள்ளத்தெளிவாக கேட்கக்கூடிய HD வாய்ஸ் கால் வசதியையும் தருகிறது.

வைஃபை அழைப்பு சேவை செயல்பட நீங்கள் செய்யவேண்டியது மிகவும் எளிதானது. வைஃபை அழைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் போனுடன் கிடைக்கக்கூடிய வைஃபை நெட்வொர்க்கை கனெக்ட் செய்தாலே போதும். சமீபத்திய ஓஎஸ் மென்பொருளை புதுப்பித்து, வைஃபை அழைப்பு வசதியை தொடங்கலாம். இதை நீங்கள் செய்து முடித்ததும், செல்லுலார் ஃபோன் போலவே தொடர்ந்து கால் செய்யலாம், டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பலாம், பெறலாம். இதற்காக, தனியாக எந்த ஒரு ஆப், லாக்-இன், நம்பர்கள் தேவையில்லை. உண்மையிலேயே, இக்கட்டுரையில் கூறப்படுவது போல இது ரொம்ப எளிதானது, சவுகரியமானது. இருப்பினும், தடையற்ற அனுபவத்திற்காக நீங்கள் வாய்ஸ் ஓவர் லாங் டெர்ம் எவல்யூஷன் மற்றும் வைஃப் காலிங் இரண்டையும் இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும்.

தற்போது 20 டிவைஸ்கள் இந்த தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கின்றன. ஏர்டெல் அனைத்து முக்கிய ஒரிஜினல் கருவி உற்பத்தியாளர்களிடம் (OEMs) எதிர்கால மொபைல் வெளியீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் இறுதியில் 20மில்லியன் ஏர்டெல் வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய 35 டிவைஸ்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான திறனை கொண்டிருக்கும். மார்ச் மாத இறுதிக்குள் சந்தையில் 50 மில்லியனுக்கும் அதிகமான வைஃபை காலிங் திறன் கொண்ட டிவைஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: