முகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகினறனர். இதற்காக பலர்

அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நாம் பல பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகிறது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ரோமங்களை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • குப்பைமேனி
  • வேப்பங்கொழுந்து
  • விரலிமஞ்சள்

செய்முறை

முதலில் குப்பைமேனி மற்றும் வேப்பங்கொழுந்தை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் விரலி மஞ்சளை சேர்த்து மாவு போல நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூச வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இவ்வாறு செய்யா வேண்டும். இப்படி செய்து வந்தால் மீசை போல் மேல் உதட்டில் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும். உதட்டில் மட்டுமல்லாது, முகத்தில் ரோமம் உள்ள இடங்களிலும் போடலாம்.

%d bloggers like this: