உலகின் மிகச்சிறிய நாடு இதுதான்..! உலகமே அறிந்து மறந்த நாடு.!!

இந்த உலகிலேயே மிகச்சிறிய நாடாக இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் இருப்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதனைவிட சிறிய நாடாக சீலேண்ட் குறித்து இனி நாம் காணலாம்.

இரண்டாவது உலகப்போரின் பொது பிரிட்டன் நாட்டில் உள்ள தேம்ஸ் நதியானது கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இந்நாட்டின் திறந்தவெளி கடல் கோட்டைகள் என்று அழைக்கப்படும் சிறிய தளத்தினை அமைத்தனர். இந்த தளங்களின் மூலமாக பிற நாட்டினை சார்ந்த விமானங்களை தடுக்கவும்., பிரிட்டிஷ் நாட்டினை சார்ந்த தடத்தில் ஜெர்மன் கடற்படை சுரங்கம் அமைப்பதை தடுக்கவும் உதவியது.

கடலின் மேற்பரப்பு பகுதியில் செல்லும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை சேதப்படுத்த கடற்படை சுரங்கம் அமைக்கப்பட்ட நிலையில்., இவை சுயமாக வெடிக்கும் தன்மை கொண்ட தலமாகும்.

பின்னர் இவரை பைரேட் வானெலி நிலையமாக பயன்படுத்தப்பட்ட நிலையில்., உரிமம் பெறாத வானெலி அலைகளை கொண்டு தகவல் தொடர்பு கொள்ள உதவியாக இருந்தது. இந்த கோட்டையில் ராப்ஸ் தளம் என்ற கோட்டையை கடந்த 1967 ஆம் வருடத்தில் ராய் பேட்ஸ் என்ற நபர் கைப்பற்றி சீலேண்ட் என்று சொந்த நாடாக அறிவித்திருந்தார்.

இந்த நாட்டின் முதல் அரசு குடும்பமாக பெட்ஸின் குடும்பம் இருந்துள்ள நிலையில்., இக்கட்டிடத்தின் மேல்பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாகவும்., சீலேண்ட் நாட்டிற்கு தனியொரு பாஸ்போர்ட் மற்றும் நாணயம்., கொடி போன்றவை கடந்த 1975 உருவாக்கப்பட்டது. பின்னர் 1978 ஆம் வருடத்தில் அலெக்ஸாண்டர் என்ற நபர் பெட்ஸின் மகனான சீலேண்ட் இளவரசர் மைக்கேலை பிணைய கைதியாக பிடித்தினார்.

இந்த முயற்சி தோல்வியில் தழுவவே., இவர்கள் தனி நாடு அந்தஸ்து கேட்டு பலமுறை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மேலும்., சீலேண்ட் உலகத்தின் மிகசிய நாடாக இன்னும் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில்., சீலேண்ட் நாட்டின் பகுதிகள் பிரபல இணையதள நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., கடந்த 2002 ஆம் வருடத்தின் கணக்கெடுப்பின் படி அந்நாட்டு மக்கள் தொகை 27 என்பதும் குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: