உப்பு உடலுக்கு நல்லது? மருத்துவர்கள் அட்வைஸ்

காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய்

போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள். பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

இந்நிலையில் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வருகின்றன. ஆனால் உப்பு இரண்டு வகைப்படம் ஒன்று கடல் உப்பு மற்றொன்று பாறை உப்பு. பெரும்பாலும் உப்பு அதிகம் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்திதான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் உப்பு உடல்நலத்துக்கு நல்லது என்கின்றது சில ஆய்வு.

30 வயதிற்கு பிறகும் 40 வயதுகளை நெருங்கும் காலத்தில் பலருக்கு ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதில் உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தங்கள் இருக்கின்றன. உயர்ந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்திய அளவின்படி உப்பை உணவில் சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.அதே நேரம் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருப்பவர்கள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், உணவுகள் அருந்துவதன் மூலம் இந்த குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை தவிர்க்க முடியும். மேலும் ஆப்பில் பழத்தை வெட்டி பாதி பயன்படுத்திவிட்டு மீதியை வைத்திருந்தால் கருமையாகும். ஆனால் அதில் கொஞ்சம் உப்பு தடவி வைத்தால் கருப்பாகாமலும், கெட்டுப்போகாமலும் இருக்கும்.

குளிர்காலங்களில் தொண்டை கட்டிக்கொண்டால் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து வாயில் ஊற்றி, நன்கு கொப்புளித்தால் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கிருமிகள் அழிந்து தொண்டை சரியாகிவிடும். மேலும் துணிகளில் கறை படிந்திருந்தால், உப்பு நீரில் ஊறவைத்து துவைத்தால் கறை நீங்கும்.

%d bloggers like this: