பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி

நாளை தைத் திருநாள். காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம் மரபு.

தை முதல் நாளில்தான் சூரியபகவான் தனது வடதிசை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார் என்பது ஐதிகம். இதற்கு, உத்தராயண புண்ணிய காலம் என்று பெயர்.

தை ஒன்று முதல் அடுத்த ஆறுமாதங்கள் உத்தராயண மாதங்களாகக் கருதப்படும். இந்த மாதத்தின் தொடக்க நாளே திருவிழாவாகக் கொண்டாடுவது இந்தியா முழுவதும் உள்ள வழக்கம்.

சூரியனையே பரம்பொருளாகக் கருதி வழிபடும் இந்த நாளில், பொங்கல் பானையை நல்ல நேரத்தில் வைக்க வேண்டும் என்று மக்கள் கருதுவார்கள். பொங்கல் பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் நல்ல யோகமுடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

எனவே, எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் மங்களம் பொங்கும் என்று ஜோதிடமாமணி கிருஷ்ண துளசியிடம் கேட்டோம்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்
பொங்கல் வைக்க உகந்த நேரம்

“நாளை தை ஒன்று. இந்த நாள் முழுவதுமே அமிர்தயோகம் உள்ளது. மேலும், நாளை மாலை 4.30 வரை பஞ்சமி திதியும் பின்பு சஷ்டி திதியும் அமைந்துள்ளது. இந்த நாளில், அதிகாலையில் 6 மணி முதல் 7 மணிக்குள்ளும், காலை 9 மணி முதல் 12 மணிக்குள்ளும், நண்பகல் 1.30 மணி முதல் 2 மணிக்குள்ளும் பொங்கல்வைத்து வழிபடலாம். இந்த நாளில் சூரியனை வழிபடுவதன் மூலம் சகல நன்மைகளும் கைகூடும்” என்று கூறினார்.

%d bloggers like this: