கூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் சேவை வாய்ஸ் சர்ச், வாய்ஸ் கமாண்ட், டிவைஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இந்த அம்சத்தை பயன்படுத்த ‘Hey Google’ அல்லது ‘OK Google’ என கூற வேண்டும்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவை

கூகுள் அசிஸ்டண்ட் சேவை தரவுகளை சரியாக புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப பதில் அளிக்கும். இந்த சேவையை பல்வேறு மொழிகளில் இயக்க முடியும். மேலும் அனைத்து கமாண்ட்களும் கூகுள் பதிவு செய்து கொள்ளும். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் சேவை அனுபவத்தை மேம்படுத்துவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

போன் மூலம் கூகுள்

எனினும், கூகுள் அசிஸ்டண்ட் சமயங்களில் தானாக இயங்க துவங்கிடும். இது பணியின் போது தொந்தரவாக இருக்கும். இவ்வாறு உங்களின் போன் மூலம் கூகுள் உங்களை கண்காணிப்பதை நிறுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலில் கூகுள் டிடெக்‌ஷன் சேவையை ஆஃப் செய்ய வேண்டும்

வழிமுறை 1: செட்டிங்ஸ் செயலியில் கூகுள் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: சர்வீசஸ் ஆப்ஷனில் சர்ச் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: வாய்ஸ் மேட்ச் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி OK Google detection ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கூகுள் மேப்ஸ் சேவையிலும் OK Google அம்சத்தை பிளாக் செய்ய முடியும்

கூகுள் அக்கவுண்ட் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை பிளாக் செய்வதற்கான எளிய வழிமுறை

உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் உள்ள வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

வழிமுறை 1: கூகுள் ஆக்டிவிட்டி கண்ட்ரோல் பக்கத்தில் சைன் இன் செய்ய வேண்டும்

வழிமுறை 2: வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் கூகுள் அக்கவுண்ட்டில் வாய்ஸ் ரெக்கார்டுகள் லின்க் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு விடும்.

சாதனத்தின் மைக்ரோபோனில் கூகுளை பிளாக் செய்வதற்கான வழிமுறை

ஆண்ட்ராய்டு மைக்ரோபோனில் உள்ள கூகுள்

ஆண்ட்ராய்டு மைக்ரோபோனில் உள்ள கூகுளை முழுமையாக பிளாக் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்:

வழிமுறை 1: செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகள் ஆப்ஷனில் See all the apps ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 3: கீழ்புறமாக ஸ்கிரால் செய்து கூகுள் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: பெர்மிஷன்ஸ் ஆப்ஷனில் மைக்ரோபோன் ஸ்லைடரை பிளாக் செய்ய வேண்டும்,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: