சசிகலா விடுதலைக்குப் பிறகு..? – அரசியல் கணக்குகள் ஆரம்பம்!

புத்தாண்டு பிறந்ததும் புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், சசிகலா குடும்பத்தினரும், அவரால் அரசியல் அடையாளம் பெற்ற ஆதரவாளர்களும்.

2017 பிப்ரவரியில் பெங்களூரு சிறையில் நான்காண்டு தண்டனைக்கைதியாக அடைக்கப்பட்டார் சசிகலா. அவருக்கான தண்டனைக்காலம் 2021 பிப்ரவரியில்தான் முடிவடையும். ஆனால், ஏற்கெனவே அவர் சிறையில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு, நன்னடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆண்டு மத்தியில் சசிகலா வெளியே வருவார் என்று நம்பப்பட்டது. இந்நிலையில்தான் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் சசிகலாவிற்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளையில், அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சசிகலாவின் விடுதலையை வைத்து அரசியல் கணக்கை ஆளும்கட்சிகள் போட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியை அ.தி.மு.க பெற்றிருக்கிறது. ஆனால் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாமிடத்திற்குப் போயிருப்பது அ.தி.மு.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலையில் சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க எதிர்கொண்டால் தோல்வி நிச்சயமென்ற அச்சம், அக்கட்சி வட்டாரத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமெனில், சசிகலா, தினகரன் இருவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென்றும் நினைக்கிறது.

இதுபற்றி, தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாவிட்டாலும் அம்மா இல்லாமலே இந்த வெற்றி நமக்குப் பெரிதுதான். ஆனால் சட்டமன்றத் தேர்தலையும் இந்த முறையில் எதிர்கொள்ளமுடியாது. சசிகலாவைக் கொண்டு வந்தால் அனைத்துமட்டத்திலும் நமக்கு வளர்ச்சி இருக்கும். அவர்கள் சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். சசிகலா விடுதலையானால் அவரை அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் எண்ணம் எடப்பாடியிடம் மேலோங்கி இருப்பதை மூத்த நிர்வாகிகளே ஒப்புக்கொள்கின்றனர்.

அதேநேரம் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.ம.மு.க கட்சியைத் துவக்கிய தினகரனும், சசிகலா விடுதலைக்குப் பிறகுதான் நமக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலா அ.தி.மு.க பக்கம் சாய்ந்தால் என்னாவது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கேட்டதற்கு ”அப்படியொரு நிலை வந்தால் அ.தி.மு.க-வுடன் நாம் இணைந்து செயல்படலாம். ஆனால், நமக்கான முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இல்லாவிடில் சித்தியே அங்கு போனாலும் நாம் கவலைப்படாமல் இந்தக் கட்சியை நடத்துவோம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் சின்னமே இல்லாமல் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்” என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்.


சசிகலா

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையையும் யோசிக்க வைத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பா.ஜ.க-வை பலப்படுத்துவது சாத்தியமான விஷயமில்லை என்பதை உணர்ந்துள்ள பா.ஜ.க மேலிடம், தற்போதுள்ள அ.தி.மு.க-வை பலப்படுத்தாதபட்சத்தில் அந்தத் தேர்தலில் தி.மு.க வென்றுவிடுமென்று எண்ணுகிறது. அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமெனில், சசிகலா, தினகரன் இருவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென்றும் நினைக்கிறது. இதற்காகவே, பெங்களூரு சிறையில் சசிகலாவை பா.ஜ.க சார்பில் ஒரு முக்கியப் பிரமுகர் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

”சசிகலாவை பா.ஜ.க தரப்பில் சிறையில் சந்தித்துப் பேசியவர்கள், ‘சசிகலாவை அ.தி.மு.க-வின் அதிகாரமட்டத்தில் அமரவைத்து தினகரனையும் அ.தி.மு.க-விற்குள் கொண்டுவந்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும் என்று பா.ஜ.க நினைக்கிறது” என்று கூறிய சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மேலும் சில தகவல்களையும் ஒப்புக்கொண்டனர்.

%d bloggers like this: