சுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா?

நம் அன்றாட உண்வில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவுப்பொருள் சுண்டைக்காய். இதற்கு கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களும் உண்டு.

பெரும்பாலும் இது இயற்கையாகவே தோட்டங்களிலும் மழைப் பகுதிகளிலும் வளர்கிறது. சுண்டைக்காய் கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. இவற்றை கசப்புச்சுண்டை மற்றும் கரிச்சுண்டை என்று அழைக்கின்றோம்.

மழைச்சுண்டைக்காய் அதிக கசப்புத் தன்மை உடையது. எனவே வற்றல் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுச் சுண்டைக்காய் உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுண்டைக்காய் எண்ணற்ற மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது.

100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

சுண்டைக்காயை உணவில் சேர்த்து வருவதால் தொண்டைச் சளியைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும், வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயை உணவில் சேர்த்து வருவதால் ஏற்படும் நன்மைகள்:

ஆஸ்துமா, வறட்டு இருமல், காசநோய் தொந்தரவு இருப்பவர்கள் தினமும் இருபது சுண்டல் வற்றலைச் நல்லெண்ணையில் வருத்து சாப்பிட்டு வந்தால் எளிதில் இந்நோய்களிலிருந்து விடுபடலாம்.

மாதம் இருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மூலநோய் உள்ளவர்கள் ஒரு கைப்பிடி பச்சைச் சுண்டைக்காயை நெய்யில் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வருவதால் மூலநோயினால் ஏற்படும் கடுப்பு நீங்கும்.

சுண்டைக்காய் சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது. கல்லீரம், மண்ணீரல் நோய்களுக்கு ஏற்றது.

சுண்டைக்காய் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கச் செய்யும்.

சுண்டைக்காய் குழம்பு எலும்புகளை உறுதியடையச் செய்யும், குரல் வளத்தைப் பெருக்கும், நாக்கின் சுவை உணர்ச்சியை அதிகமாக்கும்.

உடற்சோர்வை நீக்கி சுறுசுறுப்படையச் செய்யும்.

வாரம் இருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப் புண்களை ஆற்றி வயிற்றின் உட்புறச்சுவற்றை பலமாக்கும்.

சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் இட்டு சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டைக்காயின் இலைகள் இரத்தக் கசிவைத் தடுக்கக் கூடியது.

குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சுண்டக்காய் உதவும்.

சுண்டைக்காயுடன் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவது மிகவும் நல்லது.

இவ்வாறு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் நன்மை தரக்கூடிய சுண்டைக்காயினை தினந்தோரும் உணவில் பயன்படுத்தி நம்மை நாமே காத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

%d bloggers like this: