ஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது…!! பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக திமுகவில் ஒரு கூட்டம் வேலை செய்கிறது என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு

தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ள நிலையில் மாணிக் தாகூர் இவ்வாறு கூறியுள்ளார் . திமுக காங்கிரஸ் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்து வருகிறது , இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை, கூட்டணி தர்மத்தை திமுக மீறி விட்டது என காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கையின் மூலம் குற்றம்சாட்டியிருந்தார் .

இது திமுகவை எரிச்சலடைய வைத்தது . டெல்லியில் இதனையடுத்து சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது எனவே திமுக காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என ஆளும் கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில் , காங்கிரஸ் கட்சி எங்களை விட்டுப் போனால் கவலையில்லை காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டே இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரஸ் கட்சியை நக்கலடித்தார். இந்நிலையில் அதுகுறித்து பேசியுள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் , திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் சென்றால் கவலை இல்லை என துரைமுருகன் விமர்சித்திருக்கிறார் , தோழமை சரியில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அவர் பதிலடி கொடுத்தார் .

அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தோழமை பற்றி யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். காங்கிரஸ் ஒருபோதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றியது இல்லை என்ற அவர் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லாத போதும் கூட கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி சோனியா காந்தியால் வழங்கப்பட்டது என்றார் . காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் துரைமுருகன் நன்கு படிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார் . ஸ்டாலின் முதல்வர் ஆகி விடக்கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் வேலை செய்கிறது ஒரு பெரிய அதற்காக செயல்படுகிறது எனவும் அவர் பகீர் கிளப்பினார்.

%d bloggers like this: