புற்றுநோயானது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாக வரையறுக்கப்படுகிறது, புற்றுநோயானது மேலும் மேலும் பரவி சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
வாய் புற்றுநோய் ஒரு வளர்ச்சியாகவோ அல்லது வாயில் புண்ணாகவோ ஏற்பட வாய்ப்புள்ளது . இது உதடுகள் , நாக்கு, கன்னங்கள், வாயின் தளம், கடினமான மற்றும் மென்மையான அண்ணம், சைனஸ்கள் மற்றும் குரல்வளை (தொண்டை) ஆகியவற்றை பெரும்பாலும் தாக்குகிறது., ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தவல்லது .
எப்போது மருத்துவரை அணுக வேண்டும் ?
1.குணமாகாத நாள்பட்ட வாய்ப்புண்
3 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆறாத வாய்ப்புண் உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியமாகும் .
credit: third party image reference
credit: third party image reference
2.வெள்ளை / சிவப்பு படலங்கள்
credit: third party image reference
credit: third party image reference
3.த்ரஷ் என்னும் பூஞ்சை தொற்று
4.நீண்ட காலமாக உணவை விழுங்குதலில் ஏற்படும் அசவுகரியம்
5.கழுத்து பகுதியில் ஏற்படும் அதிக வீக்கம்
இது நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கமாகவும் இருக்கலாம் .
6.நாக்கு / இதர பாகங்களில் உணர்ச்சியின்மை
7.தாடைகளில் உண்டாகும் நாள்பட்ட வீக்கம்
8. அதிகளவு எதிர்பாராத எடைகுறைவு
ஆபத்து காரணிகள் :
- புகையிலை / சுருட்டு / பீடி ஆகியவற்றை உபயோகித்தல்
- அதிக மது பழக்கம்
- அதிகளவு வெயில் மற்றும் UV கதிர்களுக்கு ஆளாகுதல்
- பாப்பிலோமா வைரஸ்
- நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமை
“முன்கூட்டிய நோய் கண்டறிதல் நோய் குணப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது ”
நோயை சீக்கிரம் கண்டுபிடித்தலின் மூலம் 80 முதல் 90 விழுக்காடு நோயை குணப்படுத்த முடியும் .
முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை முறைகள்
- புகை பிடித்தல் , புகையிலை உட்கொள்ளுதல், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
- சத்தான அனைத்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்
- வயது வரம்பு பாராமல் வருடம் இரண்டு முறையாவது மருத்துவரை அணுகி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
- வாய் அல்லது உடலின் வேறு பாகங்களில் ஏதேனும் வீக்கம், தொடர்ச்சியான மதக்கணக்கான வலி , உணர்ச்சியின்மை , நிறமாற்றம் போன்றவை தென்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் வேண்டும்