நல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை???

நம் நாட்டில் இன்று ஏற்படும் முக்கால்வாசி மரணங்களுக்கு காரணம் இதய
நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவை. இந்த தொற்றாநோய்
கூட்டங்கள் நம்மை விரட்ட காரணம் நம் உணவில் பயன்படுத்தும்
எண்ணெய் தான்.

முதலில் நம்முடைய பாரம்பரிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்
இவை அனைத்தும் கொழுப்பு என்றார்கள்.

அதன்பின் ரீபைன்ட் செய்த
ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க. அப்புறம் சன்பிளவர் ஆயிலுக்கு மாறச்
சொன்னாங்க. கடைசியாக தவிட்டு எண்ணெய், இப்போ ஐரோப்பாவில்
இருந்து வரும் ஆலிவ் ஆயில் தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் எப்படி தேர்ந்தெடுப்பது சமையல்
எண்ணையை என்ற குழப்பம் பலரிடமும் நிலவி வருகிறது. எண்ணெய்கள்
அனைத்தும் நல்லவை தான் ஆனால் அதை எங்கு, எப்படி பயன்படுத்தப்
போகிறோம் என்பதில் தான் அது நன்மையா தீமையா என்ற செயல்பாடு
உள்ளது.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய் ஆன
நல்லெண்ணெயில் 47% பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்
அடங்கியிருந்தன. இந்த நல்லெண்ணெய் வெறும் எண்ணெய் அல்ல. அது
ஒரு மருந்து நல்லெண்ணெய் கருப்பைக்கு மட்டும் அல்ல உடலுக்கும்
உறுதி தரும்.
உறக்கம் தரும்.
ஊக்கம் தரும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
இதில் அடங்கி இருக்கும் செசாமின் , லிக்னைன் முதலான நுண்
பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை அழிக்க வல்லது.

அடுத்ததாக நம் அனைவராலும் அதிக கொழுப்பு அமிலம் அடங்கியுள்ளது
என்று அநியாயமாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு அமிழ்தம் தான் தேங்காய்
எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை கொண்ட
லாரிக் அமிலம் இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் உள்ளது. அதன்
அற்புதங்களை உணர்ந்த வணிக விஞ்ஞானிகள் தேங்காய் எண்ணெயில்
இருந்து மோனோ லாரின் எனும் பொருளைப் பிரித்து எடுத்து அதற்கும்
காப்புரிமை பெற்று மாரடைப்பு உள்ளிட்ட பல வியாதிகளுக்கு மருந்தாக
விற்கின்றனர். ஆனால் நாமோ தேங்காய் என்றாலே கொழுப்பு என்று
முடிவு செய்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வக்காலத்து
வாங்குகிறோம்.
ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது தான் ஆனால் நம் நாட்டு உணவு
முறைக்கு அது ஏற்றதல்ல காரணம். அதன் கொதிநிலை மிகக் குறைவு.
அதை சூடாகும் பொழுது அதிலுள்ள மருத்துவத்தன்மை
குறைந்துவிடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் எண்ணையை சமைக்காமல்
சேலடுகளில் பச்சையாக சாப்பிடுவார்கள் அவர்களின் வாழ்வியல்
முறைக்கு ஏற்றது இந்த ஆலிவ் ஆயில். இதைப் புரிந்து கொள்ளாத
நம்நாட்டு வியாபாரிகள் பத்து மடங்கு விலை கொடுத்து
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள் இந்த ஆலிவ் ஆயிலை.
அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட எண்ணையை நீண்ட நேரம்
வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள். இதில் தவிட்டு எண்ணெய்
,நல்லெண்ணெய் இந்தப் பிரிவில் அடங்கும்.
குறைந்த புகை அளவை கொண்ட எண்ணெய் செக்கில் ஆட்டிய தேங்காய்
எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய். நம் தென்னிந்திய உணவுகள்
பெரும்பாலும் அதிக எண்ணெய் பயன்படுத்தி அமைக்கப்படுவதால், இந்த
வகை எண்ணெய்களை பயன்படுத்தினால் நமக்கு நன்மை கிடைக்கும்.
வலுவான இதயத்துக்கு கொஞ்சம் தவிட்டு எண்ணெய் நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெய் இவை அனைத்தும் சம அளவு எடுத்து சமையலில்
பயன்படுத்தினால் இதயநோயை விரட்டியடிக்கலாம் என்கிறார்கள், இதய
நோய் வல்லுநர்கள்.

உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை
நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ,பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்
எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளை உங்களுக்கு தரும்.
ரீபைண்ட் ஆயில் செய்முறை நாம் பயன்படுத்தும் செக்கு எண்ணெய்
போல் கசக்கி பிழியாமல் ஹெக்சேன் எனும் பெட்ரோகெமிக்கல்
வாஸ்துவில் கரைத்து,எண்ணெயைப் பிரித்து அதன் இயல்பான மணம்
நிறம் அடர்த்தி அத்தனையையும் கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான
சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து இறுதியில்,
புண்ணாகி வரும் இந்த மங்குனி எண்ணெய் வகைகள் தான் ரீபைண்ட்
ஆயில் என்று நாம் இன்று பயன்படுத்தி வருகிறோம்.
எண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள்.பல நூறு ஆண்டுகளைக்
கடந்த நம்முடைய பாரம்பரிய எண்ணெய் வகைகள் இன்றைக்கு நொண்டி
அடிக்க காரணம் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
எண்ணெய் வகைகள் தான். இவ்வாறான எண்ணெய்களை தவிர்த்து நம்
பாரம்பரிய செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவோம். அதுவே
ஆரோக்கியமான வாழ்விற்கு ஒரு அடிகோளாக அமையும்..

%d bloggers like this: