சீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்?

சீனாவில் கரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியதால் 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் எனச் சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று ஜப்பான்,

அமெரிக்கா, தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள 59 நபர்கள் ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அது என்ன வகையான பாதிப்பு என்பதைக் கண்டறியமுடியாமல் இருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்குக் காரணம் கரோனா என்ற வைரஸ் என்று கண்டறிந்துள்ளனர்.

ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் வாழும் அந்த வூஹான் பகுதியில் இந்த நோய் முதன்முதலாகச் சிலரில் கண்டறியப்பட்டுள்ளது . பாதிக்கப்பட்ட நபர்கள் வூஹான் நகரில் உள்ள விலங்குகள் விற்கப்படும் ஒரு சந்தையில் வேலை செய்பவர்கள் என்பதால், இந்த வைரஸ் ஏதேனும் ஒரு விலங்கிலிருந்து பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது .


கரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படும் வூஹான் நகரின் விலங்குகள் சந்தை.

%d bloggers like this: