தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் என்ன?..!!

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினமும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது இயற்கையான ஒன்றாகும். திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களது துணையுடன் தாம்பத்தியத்தில் ஈருடலை ஓருடலாக சேர்த்து வாழ்க்கை பயணத்தை துவக்குகின்றனர்.

பொதுவாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகள் மற்றும் திருமணம் முடிந்து வருடங்கள் கடந்த தம்பதிகளுக்குள்ளும் தாம்பத்தியம் ரீதியிலான சந்தேகங்கள் இயற்கையாக எழுந்து வருகிறது. இது தொடர்பான சந்தேகத்தை தீர்க்க இயலாது சிலர் தவித்தும் வருவார்கள்.

அந்த வகையில், தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான நேரம் குறித்து அதிகளவில் சிந்திப்பது உண்டு.. இது தொடர்பான சந்தேகத்தை தீர்க்கு வகையில், தாம்பத்தியத்தில் ஈடுபடும் நேரம் குறித்து நாம் காண்போம்.

காலை வேளையில் நமது உடல் மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். இந்த நேரம் தாம்பத்தியத்திற்காக உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறலாம். நமது உடலின் ஆற்றல் மட்டம் அதிகரித்து, உடலின் டெஸ்டிரோஜன் அதிகரிக்கும் வேலையும் இந்த காலை வேலைதான்.

தாம்பத்தியத்தில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் என்பது உடலின் ஆக்சிடாஸின் அளவினை அதிகரிக்க இயலும். இதனால் நாள் முழுவதும் தம்பதிகள் இருவரும் உற்சாகத்துடன் இருந்து வருவார்கள்.

மேலும், வல்லுனர்களின் கூற்றுப்படி அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் வாழ்க்கைக்கு இனிமையையும், தாம்பத்தியத்தில் நல்ல உச்சத்தையும் ஏற்படுத்தும். காலை 7 மணிக்கு முன்னதாக தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.

%d bloggers like this: