ஸ்டாலினே! ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க.. ரைட்ல வச்சிக்கோங்க.. ஆனா ஸ்ட்ரைட்டா மட்டும் நோ.. கராத்தே

ரஜினியிடம் லெப்ட்ல வச்சுக்கோங்க, ரைட்ல வச்சிக்கோங்க, ஆனால் ஸ்ட்ரைட்டா மட்டும் வச்சிக்காதீங்க என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

நேதாஜி 124வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியபின் கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போதிலும் ரஜினியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

அவர் பேசுகையில் தமிழகத்தில் சின்ன கருத்தை சொன்னால்கூட பெரிதாக பேசுகிறார்கள். திராவிட இயக்கத்தில் அங்கேயே 6 கோஷ்டி உள்ளது. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் முரசொலியில் எழுத வேண்டியதுதானே.

தர்பார் படம்
10 முதல் 20 பேர்

தர்பார் படத்தில் வருவது போல் ஸ்டாலின் அவர்களே ரஜினியிடம் லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, நேராக வைத்துக்கொண்டால் அரசியலில் தோற்றுவிடுவீர்கள்.

ரஜினிகாந்த்
அரசியல்வாதி

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல என்றும் அவர் ஒரு நடிகர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 1996இல் சென்னை மேயராவதற்கு ரஜினிகாந்தின் புகைப்படத்தை இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் பயன்படுத்தினாரே. அது என்ன? ரஜினிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஸ்டாலின்
பாஜக

ஸ்டாலின்தான் பாஜகவிற்கு ஆதரவு வழங்கி டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த போதிலிருந்தே கராத்தே தியாகராஜன் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவே பேசி வந்தார். இதையடுத்து திமுக கூட்டணிக்கு எதிராக கருத்து கூறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் ஆதரவு
காங்கிரஸ் நிர்வாகி

தற்போது ரஜினிகாந்தை ஆதரித்து பேசும் விவாதங்களில் பங்கேற்கிறார். அவர் காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது திமுகவுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிருக்கும். இதில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார். இந்த வாய்ப்பு ஸ்டாலினுக்கு நிச்சயம் கிடைக்காது என கராத்தே தியாகராஜன் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

%d bloggers like this: