குப்பையில் கிடைக்குது கோமேதகம்!
குப்பைமேனிக் கீரை பெயரே சொல்வது போல் சாதாரணமாக தெரு ஓரங்களில் வளரக்கூடியது. ஆனால், அபாரமான நலன்கள் கொண்டது. நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில் அரிமஞ்சரி’ என்றும், நாட்டார் வழக்காற்றியலில் ‘பூனைவணங்கி’ என்றும் பேசப்படும் இந்த மூலிகை, வரப்பு ஓர வரப்பிரசாதம்.
*வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது. நெஞ்சுச் சளியுடன் வீசிங் எனும் இரைப்பும் தரும் நிலையில், குப்பைமேனி ஒரு சிறந்த கோழை அகற்றியாகச் செயல்படும்.
ஆன்டிபயாட்டிக் ஆபத்து! குழந்தைகள் ஜாக்கிரதை!!
ஆன்டிபயாட்டிக் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில். மேலும் இது போன்ற ஆன்டிபயாட்டிக் எடுப்பதன் மூலம் ஆஸ்துமா, உணவு சம்மந்தப்பட்ட ஒவ்வாமை, சரும பிரச்னை, சுவாசப் பிரச்னை மற்றம் கண்பார்வையிலும் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகவே நாம் சாதாரண ஜுரம் மற்றும் சளி பிரச்னை இருந்தாலே ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. இதனை நாம் எவ்வாறு சாப்பிடவேண்டும்.