ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.!

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது இருக்கும், இதுதான் நமது உடல் ஆற்றலையும் ரத்தத்துக்கு வேகத்தையும் தீர்மானிக்கிறது. எனவே சராசரியாக ஒரு ஆணுக்கு

ஹீமோகுளோபின் அளவு 14.5 சதவீதம் இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு ஹீமோகுளோபின் அளவு 12.5 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 சதவீதத்துக்கு கீழ் குறைகிறதோ அப்போது அவர்களின் உடல்நிலை பாதிப்பு அடைந்து ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும்.

ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவில் இமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் என்னதான் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை உடல் பிரித்து எடுத்துக் கொள்ளும், மீதமுள்ள சத்துக்கள் அனைத்தும் கழிவுகளாக வெளியேறிவிடும்.

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதினால் உங்கள் உடல் எப்போதும் சோர்வாக காணப்படும். இதனால் நாம் எந்த காரியத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் தூங்கிக்கொண்டே இருப்போம் அதுவும் ஆழ்ந்த தூக்கமாக இல்லாமல் அரைகுறை தூக்கத்தில் இருப்போம். அதீத அசதி, ஆர்வம் இன்மை, அதே போல் எது செய்வதாக இருந்தாலும் அந்த வேலையை தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம். இதுபோன்ற செயல்களை நீங்களும் செய்தால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

கருப்பு உலர்ந்த திராட்சையின் மூலமாக உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். அதற்கு நீங்கள் 3 கருப்பு உலர்ந்த திராட்சையை மாலை 6 மணி அளவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடவேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரில் இருந்து ஒரு திராட்சையை மட்டும் எடுத்து சாப்பிட்டு விட்டு அந்த நீரில் மூன்றில் ஒரு பங்கை குடித்துவிட வேண்டும். அதே போல் மதியம் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் உங்கள் இமோகுளோபின் அளவு சமநிலைக்கு வந்துவிடும்.

ஆப்பிள் மற்றும் மாதுளம் பழங்களில் ஏகப்பட்ட வைட்டமின்கள் இருக்கின்றன. இதனால் உங்கள் உடலில் கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற சக்திகளை அதிகரித்து, உங்கள் உடலில் இருக்கும் இமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

தர்பூசணி, கொய்யா பப்பாளி போன்ற பழங்களில் இமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சக்திகளைக் கொண்டுள்ளது. கோடை காலத்திற்கு மிக சிறந்த பழமாக கருதப்படுவது தர்பூசணி இதில் வைட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் பல இருக்கின்றன. கொய்யாவில் நார் சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதேபோல் பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இதை உட்கொள்வதன் மூலம் நமது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தேவையான அளவு இருக்கும்.

ஆரஞ்சு பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, கீரை, குடைமிளகாய், பிரக்கோலி, தக்காளி போன்றவைகளிளும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

நமது ரத்தத்தில் இமோகுளோபின் அதிகமாக இருப்பதற்கு நாம் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிலும் கீழே குறிப்பிடும் சத்துக்கள் மிக முக்கியமானவை. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு சத்து, நார்ச்சத்து என முக்கியமான சத்துக்கள் உள்ள உணவுகளை உட்கொண்டால் உங்கள் ஆயுளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

%d bloggers like this: