மிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்

“ `தி.மு.க தலைவர்தான் அடுத்த முதல்வர்’ என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கொளுத்திப் போட்டிருக்கிறாரே?”

காதில்

வைஃபை ஹெட்போன், கையில் டேப்லெட், ஜீன்ஸ், டீ ஷர்ட், கேமரா கோட், ரீபோக்
ஷூஸ் என அல்ட்ரா மாடர்னாக வந்தார் கழுகார். ‘‘ஓப்பன் ஆபீஸ் வந்த பிறகு
கழுகாரின் கெட்டப்பே மாறிவிட்டதே… சூப்பர்!” என்று மெச்சிய நாம், “
`மற்றவர்கள் மட்டும் கலைஞரின் பிள்ளைகள் அல்ல. நானும் கலைஞரின் மகன்தான்’
என அதிரடி காட்டியிருக்கிறாரே அழகிரி?” என்ற கேள்வியை வீசினோம்.

“கடந்த
ஓராண்டுக்கும்மேலாக மௌனமாக இருந்தார் அழகிரி. இந்த ஆண்டு அவருடைய பிறந்த
நாளை தன் ஆதரவாளரான மோகன்குமார் இல்லத் திருமண விழாவுடன் சேர்த்துக்
கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சுதான் தி.மு.க-வில் ஹாட்
டாபிக்.”

“அழகிரி வேறு என்னதான் பேசினாராம்?”


`இலங்கைத் தமிழர் பிரச்னையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில்
அடைபட்டபோது வழக்கறிஞர் மோகன்குமார்தான் அவருக்கு உதவினார். அதை அவர்
மறந்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும். இப்போதெல்லாம் மறதி
சாதாரணமாகிவிட்டது. அ.திமு.க-வினர்கூட எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுப்
பேசுகிறார்கள். ஆனால், என்னுடன் பழகியவர்கள் எல்லோரும் இப்போது என்னிடம்
பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
நினைத்ததைச் சாதிப்பேன்; நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும்
கலைஞரின் பிள்ளைகள் அல்ல. நானும் கலைஞரின் பிள்ளைதான்’ என்று
நெகிழ்ச்சியும் ஆவேசமுமாக பன்ச் வைத்துள்ளார். ‘கலைஞரின் பிள்ளை’ என்று
அழகிரி உரிமைக்குரல் எழுப்பியதை, ஸ்டாலின் தரப்பினர் கொஞ்சம்
கலக்கத்துடன்தான் பார்க்கிறார்கள்.”

“அழகிரியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?”

“தனக்கு
இல்லை என்றாலும் தன் மகனுக்காவது கட்சியில் அல்லது முரசொலி அறக்கட்டளையில்
பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்; நடக்கவில்லை. விரைவில்
சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், இப்போதே காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார்
என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஏற்கெனவே ரஜினியுடன் நல்ல தொடர்பில்
இருப்பதாகச் சொல்லப்படுவதால், அதைவைத்து அவரது மூவ் இருக்கும்
என்கிறார்கள். அழகிரியின் பிறந்த நாளுக்கு தி.மு.க புள்ளிகள் சிலரும்,
குடும்பத்திலிருந்தே சிலரும் சத்தமில்லாமல் வாழ்த்துகளைப்
பரிமாறியிருக்கிறார்கள்.”

‘‘பிரஷாந்த் கிஷோரின் கட்சிப் பதவியைப் பறித்துவிட்டாரே நிதிஷ்?”

“ஐக்கிய
ஜனதா தளத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து கிஷோரை நீக்கிவிட்டார்
நிதிஷ். ஏற்கெனவே கிஷோரின் நடவடிக்கைகள்மீது கடும் அதிருப்தியில்
இருந்தார் நிதிஷ். டெல்லி தேர்தலில் நிதிஷ் கட்சியும் சில இடங்களில்
போட்டியிடுகிறது. ஆனால், கிஷோர் அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேலை
செய்கிறார். அதனால் ‘இனியும் இவரை வைத்துக்கொண்டால் சிக்கல்தான்’ என
அனுப்பிவிட்டார்கள். கிஷோரும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லையாம்.”

“அவர்தான் தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகளின் மூளையாக மாறியிருக்கிறாரே?”

“பிப்ரவரி
15-ம் தேதி, தி.மு.க-வுக்கான தேர்தல் ஆலோசனைப் பணிகளை
அதிகாரபூர்வமாகத்தொடங்கவிருக்கிறது கிஷோர் டீம். முதற்கட்டமாக, தமிழகத்தில்
பத்துத் திட்டங்களை ஸ்டாலினை வைத்து அறிவிக்கப்போகிறார்களாம். அந்தப்
பத்துத் திட்டங்கள்தான் தி.மு.க-வின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக
இருக்கும் என்கிறார்கள்.”

“ஓஹோ…”

“மற்றொருபுறம்
அ.தி.மு.க தரப்பும் தேர்தல் ஆலோசகரை நியமிக்கலாமா என ஆலோசனை
நடத்திவருகிறது. டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
நடைபெறு கிறதாம்.”

“ `தி.மு.க தலைவர்தான் அடுத்த முதல்வர்’ என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கொளுத்திப் போட்டிருக்கிறாரே?”

“தஞ்சை
தொகுதியின் தி.மு.கழக எம்.பி-யான பழனிமாணிக்கத்தின் சகோதரர் ராஜ்குமாரின்
மகன் ஸ்ரீராம் சுப்பையாவின் திருமணம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில்
தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, திவாகரன்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில்
அமர்ந்திருந்தார் திவாகரன். இந்த விழாவில் திவாகரன் பேசும்போது,
‘ஸ்டாலின்தான் தமிழகத்தின் நாளைய முதல்வர். தமிழையும் தமிழகத்தையும்
காக்கக்கூடியவர் ஸ்டாலின் மட்டுமே. அவர் பின்னால் நாம் நிற்க வேண்டும்.
சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே நான் கட்சி தொடங்கினேன். தமிழகத்தில்
திராவிடப் பாரம்பர்யம் காக்கப்பட வேண்டும். அதைக் காக்கும் தலைவரும்
ஸ்டாலின்தான்’ என்று .மு.க-வினரே நெளியும் அளவுக்கு ஏகத்துக்கும்
புகழ்ந்துதள்ளினார்.’’

“காரணமில்லாமல் இப்படிப் புகழ மாட்டாரே!”

“தினகரனை
எதிர்த்து அரசியல் செய்தும், அ.தி.மு.க அரசாங்கம் தனக்குச் சாதகமாக
எதுவும் செய்யவில்லையே என்கிற ஆதங்கம் திவாகரன் தரப்புக்கு இருக்கிறது.
பலமுறை மறைமுகமாக இதைச் சுட்டிக்காட்டியும் எடப்பாடி தரப்பில் கண்டுகொள்ளவே
இல்லையாம். இதனால், தனது கட்சிக்கும் ‘ஆஸ்தி’க்கும் எதிர்காலத்தில்
பாதுகாப்பு கருதியே ஸ்டாலின் பக்கம் சாய்ந்திருக்கிறாராம்.”

‘‘இதற்கு அ.தி.மு.க தரப்பில் ரியாக்‌ஷன் இல்லையோ…’’

‘‘அதுதான்
திவாகரனின் மகன் ஜெயானந்த் சட்டென ட்வீட் ஒன்று போட்டிருக்கிறாரே. ‘30
ஆண்டுக்கால பகையை சுபநிகழ்ச்சியில் பேசுவது நாகரிகம் அல்ல. தி.மு.க ஆதரவு
நிலைப்பாடு என்பது எங்களுக்குச் சாத்திய மற்றது’ என்று அதில் அவர்
குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணியில், ‘திவாகரனின் பேச்சைக் கேட்டு
அ.தி.மு.க மேலிடம் ஆடிப்போய்விட்டது. அப்படி ஆகவேண்டும் என்றுதான் அவரும்
பேசினார். அதன்படியே அ.தி.மு.க மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட,
ஜெயானந்த் ட்வீட் செய்துள்ளார்’ என்று கூறப்படுகிறது.’’
‘‘ரஜினிமீதான வழக்கை வாபஸ் வாங்கியுள்ளதே வருமானவரித் துறை?’’

“2002-ம்
ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான வருமானவரிக் கணக்குகளை ரஜினி
முறையாகக் காட்டவில்லை என்று கூறி, மூன்று நிதியாண்டுகளுக்கும் சேர்த்து
சுமார் 66 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது வருமானவரித்
துறை. இந்த நோட்டீஸை ரத்துசெய்யக்கோரி ரஜினி தொடர்ந்த வழக்கை விசாரித்த
வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த
உத்தரவை ரத்துசெய்தது. வருமானவரித் துறை இதற்கு எதிராக மேல்முறையீடு
செய்தது. அந்த மேல்முறை யீட்டில்தான், ‘இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த
விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளது வருமானவரித் துறை. எல்லாம்
பா.ஜ.க-வின் கைங்கர்யம் என்கிறார்கள்’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்துப்
பறந்தார்.

%d bloggers like this: