வாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்!

இந்தியா என்கிற வியாபார அப்பத்த பங்கு போட்டுக் கொள்ள எப்போதுமே போட்டி அதிகம்.

அதிலும் குறிப்பாக சேவை சார்ந்த துறைகளில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள,

வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக், தள்ளுபடிகள் என நிறுவனங்கள் கோடிக் கணக்கில் காசை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய தேதிக்கு இந்தியாவில், வாடிக்கையாளர்களைப் பிடிக்க போராடிக் கொண்டு இருக்கும் ஒரு துறை என்றால், பேமெண்ட் சேவைத் துறையைச் சொல்லலாம்.

பேமெண்ட் அப்ளிகேஷன்

கடந்த சில வருடங்களாக இந்தியாவில், வங்கியின் நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி பணம் அனுப்புவது எல்லாம் மாறி, கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பேமெண்ட் செயலிகள் வழியாக பணத்தை அனுப்புவது ஒரு டிரெண்டாக உருவாகி இருக்கிறது. உண்மையில் வங்கியின் நெட் பேங்கிங்கை விட, இந்த பேமெண்ட் செயலிகள் மிக எளிமையாகவும், விரைவாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு முக்கிய காரணம் யூபிஐ.

யூபிஐ

கடந்த நவம்பர் 2019-ல், யூபிஐ வழியாக, ஒரே மாதத்தில் 1.2 பில்லியன் (120 கோடி) பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம். நவம்பர் 2018-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளுடன், நவம்பர் 2019-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளை ஒப்பிட்டால் இது 132% பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுவே அக்டோபர் 2019 உடன் ஒப்பிட்டால் அது 6.1 சதவிகிதம் கூடுதல் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறது.

பணப் பரிமாற்றம்

எவ்வளவு பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறது…? என்றால், கடந்த நவம்பர் 2019-ல் 1.89 லட்சம் கோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறதாம். இப்போது வரை இந்த யூ பி ஐ சேவையில் மொத்தம் 141 வங்கிகள் இருக்கின்றனவாம். தற்போது யூ பி ஐ சேவையை 10 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அடுத்த 3 வருடத்துக்குள், யூ பி ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம் என்கிறார்கள் என் பி சி ஐ தரப்பினர்கள்.

யார் தாதா

தற்போதைய நிலவரப் படி, யூபிஐ சேவையில், கூகுள் பே தான் இந்தியாவின் பேமெண்ட் செயலிகளின் தாதாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் போன் பே இரண்டாவது இடத்திலும், பேமெண்ட் நிறுவனமாகவே உருவான பேடிஎம் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இப்போது இவர்களுடன் மற்றொரு நிறுவனமும் மல்லு கட்ட இருக்கிறது.

வாட்ஸப் பே

ஆம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸப் செயலி விரைவில் வாட்ஸப் பே வசதி வரலாம். இதற்கான அனுமதிகளை வாட்ஸப் நிறுவனம் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனிடம் இருந்து பெற்றுவிட்டார்களாம். தொடக்கத்தில் இந்தியாவில் இருக்கும் 1 கோடி பேருக்கு (10 மில்லியன்) மட்டும் இந்த வாட்ஸப் பே வசதியைக் கொடுக்க இருக்கிறார்களாம். விரைவில் இந்தியா முழுமைக்கும் கொடுக்கத் தொடங்குவார்களாம்.

ஏன் தாமதம்

இந்தியவில் பேமெண்ட் செயலி சேவையைக் கொடுக்க இருப்பவர்கள், சேமிக்கும் தரவுகளை இந்தியாவிலேயே வைக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தார்கள். இந்த விதிக்கு வாட்ஸப் இத்தனை நாள் ஒத்து வரவில்லை. ஆனால் இப்போது ஓகே சொல்லி அனுமதி வாங்கி இருக்கிறது. எனவே தான் இத்தனை நாள் தாமதமாகிவிட்டதாம். தற்போதைய நிலவரப் படி இந்தியாவில் சுமார் 400 மில்லியன் பேர் (40 கோடி) வாட்ஸப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.

பயத்தில் போட்டியாளர்கள்

கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற நிறுவனங்கள் கூவிக் கூவி தங்கள் செயலியை விற்றார்கள் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாட்ஸப்போ, எடுத்த எடுப்பிலேயே சுமார் 40 கோடி யூசர்களுடன் இந்திய பேமெண்ட் சேவைத் துறையில் நுழைந்து இருப்பதால், இவர்களுக்கு ஒரு மெல்லிய பயம் இருக்கத் தானே செய்யும்.

ஒரு பெரும் பங்கு

இந்தியா முழுமைக்கும், வாட்ஸப் நிறுவனம் தன் வாட்ஸப் பே சேவையைக் கொடுக்கத் தொடங்கினால், அடுத்த சில மாதங்களில், வாட்ஸப் பே, இந்திய பேமெண்ட் சேவையில் ஒரு பெரும் பகுதி வாடிக்கையாளர்களைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. பின்ன, 40 கோடி பயனர்களுடன் களம் இறங்கினால் பிடிக்க முடியாதா என்ன..?

எங்கும் அலைய வேண்டாம்

இன்றைய தேதிக்கு, ஸ்மார்ட்ஃபோனில்

1. ஒரு செயலியில் இருந்து வெளியே வந்து

2. இன்னொரு செயலியைத் திறந்து

3. பணத்தை அனுப்புவதை எல்லாம் சிரமமான காரியமாகவும், நேரம் விரையமாகக் கூடிய காரியமாகவும் பார்க்கிறார்கள் நம் இளைஞர்கள். அதோடு சாட் செய்ய ஒரு தனி செயலி, பணம் அனுப்ப தனி செயலி என பல அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்வதையும் ஒரு அலுப்பான காரியமாக பார்க்கிறார்கள். எனவே ஒரே அப்ளிகேஷனில் மெஸேஜ் எல்லாம் அனுப்பிவிட்டு, பணத்தையும் அனுப்ப முடியும் என்றால் நன்றாகத் தானே இருக்கும். வாட்ஸப் பே சேவையைப் பயன்படுத்த ஆவலோடு காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் வாட்ஸப்.

%d bloggers like this: