எவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா? தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க!

ஆண்களுக்கு வயதான தோற்றத்தை தரக் கூடிய இரண்டு விஷயங்கள் வழுக்கையும் தொப்பையும் தாங்க. பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்ள எந்த அளவு ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அதை விட

அதிகமாக ஆண்கள் தங்களை ஆரோக்கியமாக, Fit ஆக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இரவெல்லம் பெய்த மழையைக் கூட பொருட்படுத்தாமல் ஆண்கள் காலையில் எழுந்ததும் walking செல்வதைப் பார்க்கிறோம். எல்லாம் எதற்காக?! உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்காகவும் தான். அப்படி நடையோ நடைனு நடந்தாலும் உடல் எடை குறையவே மாட்டேங்குது… தொப்பை வத்தவே மாட்டேங்குதுனு நினைக்கிறவங்க இந்த டிப்ஸ் எல்லாம் முயற்சி செய்து பாருங்க. கண்டிப்பா தொப்பை குறையும். அதுக்காக ஒரே ஒரு நாள் சாப்பிட்டு உடனே தொப்பை குறையலன்னு நினச்சு விட்றாதீங்க.. தொடர்ச்சியா நீங்க செய்யும் பட்சத்தில் தொப்பை குறைந்து நீங்களும் fit ஆகிருவீங்க.

  • தினமும் காலையில் எழுந்ததும் சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறைந்து தொப்பையும் வற்றி விடும்.
  • கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் துரித வகை உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ச்சியாக குடித்து வந்தால் தொப்பை குறையும்.
  • தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் இரவில் உறங்கும் பொழுது குப்புறப்படுத்து தூங்க வேண்டும்.
  • நெல்லிக்காயுடன் இஞ்சியைச் சேர்த்து சாறு எடுத்து காலையில் குடித்து வந்தாலும் உடல் எடை குறைந்து தொப்பை கரையும். அருகம்புல் சாறு குடித்தாலும் தொப்பை குறையும்.
  • பச்சைக் காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் அருந்தும் பொழுது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதால் அதிகப்படியான கொழுப்புகள் குறையும்.
  • வைட்டமின் C சத்துகள் அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை சாறு, ப்ராக்கோலி, பெர்ரிபழங்கள் இவற்றை உண்ணும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து தொப்பை குறையும்.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது கொள்ளு. கொள்ளு ரசம், கொள்ளு துவையல் என ஏதோ ஒரு வகையில் கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைந்து தொப்பையும் கரையும்.
%d bloggers like this: