
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நாம் நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்ததை மறந்து விடுகிறோம்..அவர்கள் கூறிய அனைத்திலும் அறிவியல் இருக்கிறது என்பதை தற்போது அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு வருகிறோம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்தாலும் மறுபக்கம் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. தற்போதுள்ள கால கட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்து நமது பழக்கவழக்கங்கள் பலவற்றை மாற்றியுள்ளோம்.
அதில் ஒன்று, இரவில் உறங்குவதற்கு கட்டில், பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை என உபயோகிக்கிறோம். நமக்கு நோய்கள் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நோய்கள் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா..
‘பாயில் படு, நோயை விரட்டு’ என்பது பழமொழி..