அன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி! 160 இடங்களில் போட்டி உறுதி!

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரீதியில் வந்து விழுகிறது அந்த சேதி. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து அதற்கான காய்நகர்த்தி வருகிறார். தமிழகம் முழுக்கவே

சத்தமில்லாமல் ரஜினி மக்கள் மன்றத்தினர் படுஜோராக வேலைப் பார்த்து வருகிறார்கள். சொல்லப்போனால், சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை முதன்முதலில் துவங்கியதே ரஜினி மக்கள் மன்றத்தினர் தான்.

நாளுக்கு நாள் சத்தமில்லாமல் ரஜினியின் செல்வாக்கு, வோட்டுக்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்கிற நல்ல செய்தி ரஜினியை மேலும் குஷியாக்கியிருக்கிறது.

இந்நிலையில் தான் பாமக அன்புமணியின் வயிற்றில் ஆசிட்டைக் கரைத்து ஊற்றியிருக்கிறார் தமிழருவி மணியன்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தினகரனின் கட்சியுடன் ரஜினி கூட்டணி அமைத்தால் ஓட்டுக்களை பாதிக்கும் என ரஜினி நினைக்கிறார். அதனால் தினகரனுடன் கூட்டணி கிடையாது. ஆனால், ரஜினியின் கூட்டணியில் பா.ம.க இணையும்’ என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்.தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அன்புமணிக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆசை. நாளைய முதல்வர், மாற்றம் என்று தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டியும் இன்று வரையில் அன்புமணிக்கு பரிசாக ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ரஜினியின் கூட்டணியில் இணைவதற்கான காய்களை சத்தமில்லாமல் ராமதாஸ் செய்து வருகிறார் என்கிறார்கள். அதன் வெளிப்பாடே தமிழருவி மணியனின் பேட்டி.

ஒரு காலத்தில் ரஜினியின் ஒவ்வொரு பட ரிலிஸ் சமயத்திலும் மாஸ் காட்டிய ராமதாஸும், அன்புமணியும் இப்போது ரஜினி முதல்வர் ஆவதற்காக தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை என்ன சொல்வது? என்று சிரிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்! யார் கூட்டணிக்கு வந்தாலும், ரஜினியின் கட்சி 160 இடங்களில் போட்டியிடப் போவது உறுதி என்கிறார்கள்.

மீண்டும் முதல்வரியைப் படிச்சுப் பார்த்துக்கோங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தானே?

%d bloggers like this: