அல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா ?

வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அதிமதுரப்பொடியை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகும்.

அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். சிறுநீரக நோய் தொற்றுகளால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதையும் தடுக்கிறது.

அதிமதுர பொடியை பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி குறைகள் சரியாகும். தலையிலுள்ள சிறு புண்களும் குணமாகும்.

அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல், இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சிறுநீர் எரிச்சல் போன்றவைகளை குணமாகும்.

%d bloggers like this: