நம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:

நம் அன்றாட வாழ்வில் பல பொருள்களை பார்த்து நகர்கிறோம் பயன்படுத்தியும் செல்கிறோம். ஆனால் அதில் சில பொருட்களில் மட்டும் நமக்கு சில சந்தேகங்கள் எழக்கூடும். ஆனால் அதற்கான விளக்கங்கள் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற சில சந்தேகங்களுக்கு நான் என்று உங்களுக்கு விடை கூற போகிறேன்.

1) பீர் பாட்டில்கள்:

ஆண்கள் அருந்தும் பீர் பாட்டில்கள் அடர்ந்த காவி நிறத்திலோ அல்லது அடர் பச்சை நிறத்திலும் இருக்கும். பீர் பாட்டில்கள் 19ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தெளிவான பாட்டில்களில் தான் விற்பனை செய்தனர். இந்த பாட்டில்களின் மேல் சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு அதன் அசல் சுவையைக் கெடுத்து அதன் மீது துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதற்கான உண்மையான காரணம், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பீர் பாட்டில்களின் உள்ளே ஊடுருவி சென்று பீர் சுவைக்காக சேர்க்கப்பட்ட மூலப்பொருட்களை சீர்குலைத்து அதன் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தெளிவான இவைகளுக்குப் பதிலாக அடர் காவி நிறத்தில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் அதற்காக பாட்டில்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் அடர் பச்சை நிற பாட்டில்கள் உபயோகப்படுத்தப்பட்டன.

2) தண்ணீர் பாட்டில்கள்:

சில உணவு பொருட்களை வாங்கும் பொழுது அதன் கவர்களில் அல்லது அதன் பாட்டில்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். இதே போன்று தண்ணீர் பாட்டில்களும் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கும். இதற்கு அர்த்தம் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீருக்கான காலாவதி தேதியை குறிப்பதல்ல. அந்த பாட்டிலுக்காக குறிப்பதாகும். ஆம், இத்தகைய பிளாஸ்டிக் பாட்டில்கள் சில குறிப்பிட்ட நாட்களிலேயே அதன் தன்மையை இருப்பதால் அந்த பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து அதை குடிப்பவர்களுக்கு உடல் உபாதையை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதி குறிக்கப்பட்டிருக்கிறது.

3) ரயில் பெட்டியின் கடைசி பெட்டிகளில் குறிக்கப்பட்டிருக்கும் பெரிய எக்ஸ் (X) குறி:

ரயில் பெட்டிகளின் கடைசி பெட்டியில் எக்ஸ் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும் அதை நாம் அனைவரும் கண்டிருப்போம். இதற்கு காரணம் இதுவே அந்த ரயிலின் கடைசி பெட்டி என்பதை அறிவதற்காக ஆகும். ரயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இருக்கும் ரயில் பெட்டிகளில் இந்தக் குறியீடு உள்ளதா என்று சோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அதிவேகமாக செல்லும் ரயில்களில் சில பெட்டிகள் துண்டித்து விடப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாகவே இந்த குறியீடு போடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இந்தக் குறிகள் இல்லாதபட்சத்தில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு விட்டன என அறிந்து ரயில்வே ஊழியர்கள் அதற்கான மீட்பு பணிகளை மேற்கொள்வார்.

%d bloggers like this: