இனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி!

2 பில்லியன் பயனர்களை கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து புதிய அப்டேட்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வண்ணமே இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்பதை ஒரே நோக்கில் வைத்து செயல்படும் வாட்ஸ்ஆப்பின் புதிய செக்யூரிட்டி அப்டேட்கள் இதோ!

Two-step authentication

இந்த வசதி உங்களின் வாட்ஸ்ஆப்பிற்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. உங்களின் வாட்ஸ்ஆப்பினை நீங்கள் வேறொரு மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் ஓப்பன் செய்யும் போது 6 இலக்க டிஜிட்டல் பாஸ்கோடினை சமர்பிக்க கோரி கேட்கும். இது ஓ.டி.பி. போன்று செயல்படாது. உங்களின் சிம்கார்டையே யாரேனும் திருடிச் சென்றாலும் வாட்ஸ்ஆப்பின் தகவல்களை படிக்க இயலாது. மேலும் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த பாஸ்கோடினை உங்கள் வாட்ஸ்ஆப் உங்களிடம் கேட்கும். சரியான நபர்களின் கையில் தான் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்பதை அது உறுதி செய்யும். Settings > Account > Two-step Verification > Enable இதனை தேர்வு செய்து உங்களின் மெயில் ஐ.டி.யை தர வேண்டும். ஒரு வேலை உங்களின் பாஸ்கோடினை நீங்கள் மறந்துவிட்டால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

Biometric Lock

பேஸ் ஐடி, டச் ஐடி ஆகியவற்றை கொண்டு உங்களின் வாட்ஸ்ஆப்பினை ஆப்பரேட் செய்ய இயலும். இனி நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களின் வாட்ஸ் ஆப்பினை யாரும் ஓப்பன் செய்து படிக்க இயலாது.

Set who can add you in a group

க்ரூப் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவே உங்களுக்கு இந்த ஆப்சனை வழங்கியுள்ளது வாட்ஸ்ஆப். கல்லூரி, பள்ளி, மற்றும் வேலை என அனைத்து இடங்களிலும் நீங்கள் பார்க்கும் அதே நபர்களை க்ரூப்பிலும் இணைத்து அடிக்கடி ”கடுப்படிப்பார்கள்”. அதனை சரி செய்யத்தான் இந்த க்ருப் செட்டிங்க்ஸ். இதில் உங்களை யார் வேண்டுமானாலும் அவர்களின் குழுவில் இணைத்துக் கொள்வதற்கான ஆப்சன்கள் துவங்கி, ‘மை காண்டாக்ட்ஸ்’ மற்றும் நோ ஒன் போன்ற ஆப்சன்களும் அங்கு உள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் செட்டிங்க்ஸை மாற்றி நேரத்தை மிச்சம் செய்யுங்கள்.

Make your Display Picture private

உங்களின் டிஸ்பிளே பிக்சரைக் கூட நீங்கள் ப்ரைவேட் செட்டிங்ஸில் மாற்றிக் கொள்ளலாம். அனைவரும் பார்க்கும் படியும், உங்களின் காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மற்றும் யாருக்கும் வேண்டாம் என்ற முடிவினையும் நீங்கள் இதன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் பெற்றிட Accounts > Privacy ->“Profile photo” செல்லவும். அதில் மூன்று ஆப்சன்கள் தோன்றும்– “Everyone”, “My contacts”, and “Nobody” என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

Hide your Last seen

உங்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் மாற்றிக் கொள்ள இயலும். எனவே உங்களின் நண்பர்கள் உங்களிடம் வந்து விடிய விடிய யாருடன் பேசிக் கொண்டிருந்தாய் என்று கேள்வி எழுப்பாமல் இருப்பார்கள். Settings > Accounts > Privacy and tap on “Last seen” சென்று உங்களுக்கான ஆப்சனை தேர்வு செய்து கொள்ளலாம்.

%d bloggers like this: