தேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக…!! வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…!!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போதே தீவிரமடைய தொடங்கியுள்ளதாக தகவல்கள்

வெளியாகி உள்ளன . இதற்கான பணியில் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன . சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக பிரபல அரசியல் நிபுணரான பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனையைக் கேட்டு திமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன . திமுக ஒரு அணியாகவும் அதிமுக மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன .

காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் , மதிமுக , கம்யூனிஸ்ட்கள் , உள்ளிட்டவை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது .

அதிக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் , கட்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமை கழக நிர்வாகிகளாக நியமித்து அவருடைய அனுபவத்தை தேர்தலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . அதிமுகவின் உள்ளதுபோல 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் , உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கொடுத்துள்ளதாக தெரிகிறது . அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு உள்ள குற்றப்பின்னணி இல்லாதவர்களை வேட்பாளராக களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது . இதற்காக திமுக முன்னணி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சித் தலைமை கேட்டு வருகிறது . அதே நேரத்தில் கூட்டணி கட்சியினருக்கும் பிரச்சினை இன்று தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது பற்றியும் திமுக பிரசாந்த் கிஷோரின் உதவியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

%d bloggers like this: