Daily Archives: மார்ச் 18th, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் இந்தப் பூமியைக் காக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்போருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று, தற்போது 100 -க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கு அரசு மற்றும் பல்வேறு துறைகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் இந்தப் பூமியைக் காக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்போருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; ஒன்றாக வேலை செய்வது நல்ல பலன்களுக்கு வழிவகுக்கும், இதனால் பலருக்கு நன்மை கிடைக்கும்.வீடியோ மாநாட்டின் போது தனது உள்ளார்ந்த கருத்துக்களை சக சார்க் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு பிரதமர் ஹசீனாவுக்கு நன்றி கூறுகிறேன். ஆராய்ச்சியாளர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த சந்தர்ப்பத்திற்கு உயர்ந்து, ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.
எங்கள் குடிமக்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்வோம். குழுப்பணி காரணமாக இதுபோன்ற முயற்சிகள் சாத்தியமாகும், மேலும் அதை சாத்தியமாக்குவதற்கு உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். எங்கள் கிரகத்தை பாதுகாப்பானதாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு எந்த வார்த்தைகளும் ஒருபோதும் நியாயம் செய்யாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் கருவி

இன்று எந்த நேரமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இளம் வயதினிலேயே மாரடைப்பு வந்து மரணிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர். சர்க்கரை  நோயும், உயர் ரத்த அழுத்தமும் சாதாரணமாகிவிட்டது. இன் னும் என்னென்னவோ பிரச்னைகள் நம் ஆரோக்கியத்துக்கு எதிராக நிற்கின்றன. இருந்தாலும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளவே எல்லோரும்

Continue reading →

கொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்!

கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது.
தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கொண்டுள்ளதாகவும், இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.