இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா?

 

காடுகளின் சாலை ஓரங்களில் நடந்து போகும் போது சாலை ஓரத்தில் சிறிய மரங்களும், பெரிய மரங்களும், அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும். மரங்களில் பறவைகளின் நகர்வு தற்போது  மிகவும் குறைவாக காணப்படுகிறது. மார்ச் 20 ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாச்சே, சரி அவைகளையாவது பார்க்க ஆசைப் பட்டால் இன்றைய சூழலில் அவைகளும் தென்படவில்லை, உடனே சில வருடங்களுக்கு முன்பு ஊர்புறத்திற்கு சென்றபொழுது ஊர்க் குருவின்னு சொல்லுற சிட்டு குருவியை அங்கே கண்டதுண்டு. ஆனால் இன்று அவைகளை ஏன்  பார்க்க முடியவில்லை என்று சிந்தனை அனைவரின் மனதிலும் எழுகிறது.

உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20ம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங் களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள் 2010ம் ஆண் டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவு கூறப்படுகிறது.
இந்நிலையில் உலக சிட்டுக்குருவிகள் நாள் குறித்தும், தற்போதைய சூழ லில் சிட்டுக்குருவிகள் வெகுவேகமாக அழிந்து வருவதற்கான காரணங் கள் மற்றும் அவற்றை எவ்வாறு காப்பது என்பது குறித்து பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் வன உயிரியல் விஞ்ஞானி டாக்டர் குமரகுரு கூறுகையில்,
முன்னாள்  பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சீறிய முயற்சியால் 1972ல் வன விலங்கு சட்டம் இயற்றபட்டது. பல உயிர்கள் பாதுகாக்க பல் உயிர் பெருக்கத்திற்கு முத்தாய்ப்பாக இந்த சட்டம்  விளங்குகிறது.
அவற்றில் சிங்கம், புலி, மான்கள், காட்டுமாடுகள்,? பறவையினங்கள், யானை, காண்டா மிருகம் இப்படியாக பல உயிர்களின் பாதுகாப்பிற்கு சட்டம் இயற்றப்பட்டது. சட்டத்திற்கு பொது மக்களின் ஆதரவும் அவசியமானது. இன்றைய காலகட்டத்தில் சிறிய குருவியினத்தின் பாதுகாப்பு வரை மக்களின் ஒத்துழைப்பு மிக அவசிய மாகின்றது. ஏனெனில் உலகசூழல் உணவு வலை யில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சிட்டுக்குருவி தினம் 2010ம் ஆண்டிலிருந்து கொண்டாப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் சிட்டு குருவியை நேசிக்கிறேன் என்பது சாலசிறந்தது.
வாழிடங்கள் தேடியலைகின்ற குருவிகள் வாழச் சிறந்தது. உலக சிட்டுக் குருவி தினத்தின் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்களில் முகம்மது டிலவர் பங்கு நினைவில் கொள்ள வேண்டும். பறவையில் விஞ்ஞானிகளான சாலீம் அலி, டில்லான் ரிப்ளே, ஆகியோரின் பறவையியல் புத்தகம் உலகளவில் சிறந்த ஒன்று, சாலீம் அலி தி பால் ஆப் ஸ்பாரோ என தனது புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது நினைவில் வைக்க வேண்டிய செய்தியாகும். உணவு வகையில் சிங்கம் முதல் சிட்டுகுருவி வரை சிறப்பான பங்கு வகிக் கின்றது ஆங்கிலத்தில் ஸ்பாரோ என அழைப்பர். ஊலகளவில் இந்த சிட்டுக் குருவி சிற்றினங்கள் 24ம் இந்தியாவில் 5ம் உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் ஜெனரல் ராஜேந்திர சிங் தனது செயல்பாட்டின் அடிப்படையில் ஸ்பேரோ என பெயர் பெற்றார். ஏனெனில் சிட்டுக்குருவியிடம் உள்ள விடாமுயற்சி, கடின உழைப்பு, சோர்வின்மை, நிலைத்த செயல்பாடு போன்றவற்றால் அவரும் பெயர் பெற்றார்.
சிட்டுக்குருவி கூர்மையான அறிவுத்திறன் குறித்து ஆய்வுகள் செய்த பிட்ஸ் வாட்டர் (1994)ல் தனது ஆய்வு அறிக்கையில் அவற்றின் மூளையளவானது 4.3 என குருவியின் உடல் எடையோடு ஒப்பிட்டுள்ளார். சிட்டுக்குருவியின் சராசரி ஆயட்காலம் சுமார் மூன்று வருடங்களாகும். இத்தகைய குறைவான ஆயுட் காலத்தை கொண்டுள்ள இக்குருவியினத்தின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. பொதுவாக பறவைகள்’ சூழல்  மாற்றத்தை தெரியப்படுத்தும் உயிர்காரணிகள் என்றால் அது மிகையாகாது. ஆம் சுற்றுச்சூழலில் உள்ள சிறிய மாற்றத்தைக் கூட பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. செல்போன் கோபுரம் நரம்பு மண்ட லத்தை மட்டும் பதிப்பதோடு நின்றுவிடவில்லை. ஆவைகளில் இனப்பெருக்க சுழற்சி முறையிலும் விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் 900 மெகா ஹெர்ட்ஸ் அலைகள்  பூச்சியினத்தின் இனப்பெருக்க முறையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காரணம் பூச்சியினங்கள் பல பறவையினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. ஆகவே சிட்டுக் குருவியினங்கள் குறைந்த தன்மையுடைய மின்காந்த அலைகளால் பாதிக்கப்படுகிறதாம்.
ஆகவே ஆய்வாளர்கள் கூற்றுப்படி அலைபேசி கோபுரங்கள் அவற்றின் இன அழிவுக்கு ஒரு முக்கிய காரணமாக பறைசாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. அலைபேசி கோபுரங்கள் நிறுவப்படவேண்டிய சில சட்ட திட்ட வரை முறைகளை இவர்கள் கைகொள்ளவில்லை என மேலும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சைனுதீன் பாட்டாழி இதுகுறித்து பல ஆய்வுகளை சுற்றுச்சூழல் விஞ்ஞானி என்ற முறையில் பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு சிட்டுக்குருவியினங்களை பாதுகாக்கப்பட வழியுறுத்தி வருகிறார்கள். கேரளம், கொல்லம் பகுதிகளை சார்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி பாட்டாழி சர்வதேச அளவிலும் முன்னெடுத்து வைத்துள்ளார். இவைகள் மட்டுமல்லா மல் காரீயம் நீக்கப்படாத பெட்ரோல், அவற்றின் மூலம் வரும் மெத்தில் நைட்ரேட் என்ற உயரிய விஷ பூச்சியினங்கள் அழிய காரணமாக உள்ளது. பூச்சியினங்கள் அழிந்தால் இவைகளை நம்பியுள்ள பறவையினங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது என்பது உண்மையாகும். பயிர்களை தாக்கும் பூச்சியினங்களை சிட்டுக்குருவி போன்ற பறவைகள் பிடித்து தின்பதால் பயிர்கள் பாதுக்காக்கப்படுகிறது.
எனவே விவசாயிகளின் நண்பன் என சொன்னால் சாலச் சிறந்தது. உலகிலேயே அண்டார்டிகாவில் மட்டும்தான் சிட்டுகுருவியினங்கள் வாழவில்லை. மேலும் உலக வெப்ப மயமாதல், பசுமைகுடில், வாயுக்கள், காற்று சீர்கேடு உயிர்கொல்லி மருந்துகள் என இப்படி பலவிதமான அச்சுறுத்தலோடு பலவித கோணங்களில் எல்லா நேரங்களிலும் போராடியே வருகிறது. இயன்றதை செய்வோம் இன்றே செய்வோம் நன்றே செய்வோம் சிட்டு குருவியினங்கள் வாழ நாம் வசிக்கும் வீட்டுபுறத்தில் தானியங்கள் தண்ணீரை வைப்போம் சுற்று சூழல் சீர்கேட்டினை குறைப்போம்.
செல்போன்களின் பயன் பாடுகளை குறைப்போம் சிட்டுகுருவியினங்கள் வாழ வழிகுப்போம். கார்ட் போடு மற்றும் மரப்பலகையில் சிறிய கூண்டு பெட்டியினை செய்து வீடு களிலும் பொது இடங்களிலும் அமைத்தால் அவற்றின் இன அழிவை தடுக்கலாம் என உறுதியேற்போம் இந்த உலக சிட்டுக்குருவி தினத்தில். இவ்வாறு டாக்டர் குமரகுரு கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: