இரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா? தூங்குவதற்கு சிரமமாக இருக்கிறதா?

பொதுவாகவே இப்பொழுது இருக்கும் இயந்திர உலகத்தில் அனைவருக்கும் 24 மணி நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. 24 மணி நேரம் இருந்தாலும் அவர்களால் வேலை செய்து முடிக்க முடியவில்லை. மேலும் நேரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும்போது

தூங்குவதற்கு யாரும் சரியாக நேரம் ஒதுக்குவதில்லை. மேலும் அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம் காரணமாக தூங்குவதற்கு நேரம் ஒதிக்கி தூங்கினாலும், சரியான தூக்கம் கிடைப்பதற்கு வழி இல்லை.

ஆனால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். அதிலும் ஆண்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவர்கள் விந்தணுவில் உயிரணு இல்லாமல் போகும் வாய்ப்புகள் கூட உள்ளது. என்று ஒரு கருத்து கணிப்பு கூறுகிறது. ஆகவே ஆண்களே குறைந்தபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மேல் கண்டிப்பாக வேண்டும்.

நீங்கள் தூங்க செல்கிறீர்கள் என்றால் தூங்குவதற்கு முன்பு நீங்கள் படுக்கப் போகும் இடம் நன்கு கால் கைகளை நீட்டி தூங்க வசதியாக இருக்கிறதா என்பதை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் மூளை நீங்கள் தூங்கும் இடத்தை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளும். அதற்கு ஏற்ப உங்கள் உடலை உபயோகப்படுத்தி தூங்கச் செய்யும். மேலும் பற்களை கடித்து வைத்திருக்காமல் லூசாக விட்டு விட்டு தூங்குங்கள். அவ்வாறு செய்தால் தூக்கம் உடனே வந்துவிடும். அவ்வாறு தூக்கம் வரவில்லை என்றால் கண்களை வேகமாக பத்திலிருந்து பதினைந்து முறை மூடித் திறக்க வேண்டும் அவ்வாறு செய்தாலும் தூக்கம் விரைவாக வந்து விடும்

%d bloggers like this: