Daily Archives: மார்ச் 30th, 2020

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? – விரிவான அலசல்–BBC Tamil

மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.

உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா?

ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

Continue reading →

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

Continue reading →

கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.

இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.

இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

Continue reading →

கொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

உலகம் முழுக்க அறிவியலாளர்கள் வியக்கத்தக்க அளவில் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாம் இன்னும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

சில முக்கியமான கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன.

Continue reading →

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன.

Continue reading →

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர்கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர்தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார். இத்தனைக்கும் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர் அமைச்சர்கள். அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் குதித்து சோதனை போடுவது, செய்தியாளர்களை சந்திப்பது, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவது என இரவு பகல் பாராமல் பம்பரம் போல சுழன்று வந்தார்.இருப்பினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர். அப்போது தான் வெளிநாடு செல்லாத ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவரைப்பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டன. வெளிநாட்டில் இருந்து வந்த மதப்பிரச்சாரகர்கள் தமிழகம் வந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் என்பதும், அவர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றதும் தெரிய வந்தது.

தமிழகத்தில் இனியும் கொரோனா தொற்றால் யாரும் இறக்கக்கூடாது எனத் திட்டமிட்டு இருந்த விஜயபாஸ்கருக்கு அடுத்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, ’’டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிஹி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மூலம் தான் அதிகமாக கோரோனா தமிழகத்தில் பரவுகிறது என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் விஜயபாஸ்கரை வெளவெளக்கச் செய்துள்ளது.

அடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டார் விஜயபாஸ்கர். இந்தத் தகவல் எடப்பாடியாருக்கு தெரிவிக்கப்பட அந்தப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தச் சொல்லி இருக்கிறார். எப்போதும் பேட்டி கொடுத்து வந்த விஜயபாஸ்கர் இந்த இரண்டு நாட்களாக அமைதியாக இருந்து விட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி கொடுக்கக் காரணம் இந்த விஷயம் மத ரீதியிலானதாக இருக்கிறது.

ஆகையால், நடவடிக்கை எடுக்கும்போது அது அதிமுகவுக்கு சில தர்ம சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தப்பொறுப்பை அதிகாரிகளே கையாளட்டும் என எடப்பாடி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ராங்கால் நக்கீரன் 27.3.20

ராங்கால் நக்கீரன் 27.3.20

Continue reading →