Monthly Archives: மார்ச், 2020

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..!

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர்கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர்தமிழகத்தில் இதுவரை 67 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார். இத்தனைக்கும் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர் அமைச்சர்கள். அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக களத்தில் குதித்து சோதனை போடுவது, செய்தியாளர்களை சந்திப்பது, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவது என இரவு பகல் பாராமல் பம்பரம் போல சுழன்று வந்தார்.இருப்பினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அடங்கவில்லை. எங்கிருந்து வந்தது? எப்படி கட்டுப்படுத்துவது? என்கிற குழப்பத்தில் தவித்து வந்தார் விஜயபாஸ்கர். அப்போது தான் வெளிநாடு செல்லாத ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவரைப்பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டன. வெளிநாட்டில் இருந்து வந்த மதப்பிரச்சாரகர்கள் தமிழகம் வந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் என்பதும், அவர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றதும் தெரிய வந்தது.

தமிழகத்தில் இனியும் கொரோனா தொற்றால் யாரும் இறக்கக்கூடாது எனத் திட்டமிட்டு இருந்த விஜயபாஸ்கருக்கு அடுத்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, ’’டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிஹி ஜமாத் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் 1500 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் மூலம் தான் அதிகமாக கோரோனா தமிழகத்தில் பரவுகிறது என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் விஜயபாஸ்கரை வெளவெளக்கச் செய்துள்ளது.

அடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டார் விஜயபாஸ்கர். இந்தத் தகவல் எடப்பாடியாருக்கு தெரிவிக்கப்பட அந்தப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தச் சொல்லி இருக்கிறார். எப்போதும் பேட்டி கொடுத்து வந்த விஜயபாஸ்கர் இந்த இரண்டு நாட்களாக அமைதியாக இருந்து விட்டு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி கொடுக்கக் காரணம் இந்த விஷயம் மத ரீதியிலானதாக இருக்கிறது.

ஆகையால், நடவடிக்கை எடுக்கும்போது அது அதிமுகவுக்கு சில தர்ம சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்பதால், இந்தப்பொறுப்பை அதிகாரிகளே கையாளட்டும் என எடப்பாடி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ராங்கால் நக்கீரன் 27.3.20

ராங்கால் நக்கீரன் 27.3.20

Continue reading →

வீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே!

இந்த லாங் லீவ்ல, நமக்குள்ளே ஜாலியா, யூஸ்ஃபுல்லான சின்னச் சின்ன புராஜெக்ட் ஒர்க் கொடுத்துப்போம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு டைம் பிக்ஸ் பண்ணிப்போம். அதையெல்லாம் யாரு சரியா பண்றாங்கன்னு பார்ப்போம்.

Continue reading →

என்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு!

கரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க நடிகர்கள் பலரும் தங்கள் இடங்களைக் கொடுக்க முன்வந்திருப்பதாகச்

Continue reading →

ராங்கால் நக்கீரன் -24.3.20

ராங்கால் நக்கீரன் -24.3.20

Continue reading →

Earth Therapy தெரியுமா?!

மண், கற்கள், புல், பாறைகள் நிறைந்த தரையில் வெறும் காலுடன் நடப்பதன் மூலம் பூமியின் இயற்கை ஆற்றலுடன் நம்மை இணைக்க முடியும். வெறும் காலோடு, பூமியுடனான இணைப்பின் மூலம் பலரை பாதிக்கும் நீண்டகால வலி, சோர்வு மற்றும் பிற நோய்களைக் குறைக்க முடியும்.

Continue reading →

மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்

நம்முடைய விருப்பங்களில் நாம் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு முகப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் நம் மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அப்போதுதான் நாம் மனதை ஆளுகை செய்ய நல்ல திட்டங்களை தீட்ட முடியும். இதுபோன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மூளையின் திறன் நன்கு Continue reading →

வீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா? இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…

உலகம் முழுவதும் கொரோனாவை தடுக்க சுய தனிமை என்பது அவசியமாகிறது. ஆனால் சுய தனிமை அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஓவ்வொரு நாளும் தனி அறையில் பேசக் கூட ஆள் இல்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த தனிமை

Continue reading →

வீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே பலரும் அலுவலகப் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள பெண்கள் அலுவலகப்

<!–more–>

பணிகளையும் செய்துகொண்டு அதேசமயம் குழந்தைகளையும், வீட்டையும் சமாளித்து வருகின்றனர்.
திடீரென வந்த இந்த நெருக்கடியால் பலருக்கும் என்ன செய்வது , இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றனர். அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்..!

திட்டமிடுங்கள் : காலை எழுந்ததும் முன்யோசனையின்றி எழுந்து வேலைகள் செய்வதை விட, முதல் நாளே என்ன செய்வது என பட்டியலிடுங்கள். என்ன சமையல், என்னென்ன அலுவலக வேலைகள் உள்ளன என்பனவற்றை பட்டியலிட்டு , திட்டமிட்டு அதற்கென நேரத்தையும் வகுத்துக்கொள்ளுங்கள்.
இதனால் டென்ஷன் ஃப்ரீயாக வேலை செய்யலாம். உதவி : அனைத்து வேலைகளையும் நீங்களே தலையில் போட்டுக்கொள்ளாமல் உங்கள் கணவருக்கும் வேலைகளைப் பிரித்துக்கொடுங்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள, சமையல் செய்ய என அனைத்திலும் பங்கு போட்டு செய்தால் பிரச்னை இருக்காது. இருவரும் வீட்டில் இருந்தும் அலுவலகப் பணியால் பிஸியாக இருப்பீர்கள். இப்படி பகிர்ந்து செய்யும்போது கணவருக்கும் உங்களுக்குமான நெருக்கமும் அதிகரிக்கும்.

தொடர்பு : கணவன் மனைவி இருவரும் வீட்டில் அலுவலகப் பணி காரணமாக குழந்தையிடம் பேசுவதைத் தவிர்த்துவிடாதீர்கள். அதேபோல் தொல்லை செய்கிறார்கள் என்பதால் செல்ஃபோனை கையில் கொடுக்காதீர்கள். மூளை வேலைசெய்யும் வகையில் சில ஆக்டிவிட்டீசை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவ்வப்போது 15 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி இருவரும் குழந்தைகளோடு விளையாடுங்கள், உரையாற்றுங்கள்.

மூளைக்கு வேலை : ஆர்ட் கிராஃப்ட் செய்வது, ஓவியங்கள் வரைவது என்பன போன்ற விஷயங்களை அவர்களுக்கு வேலையாகக் கொடுங்கள். செல்ஃபோன், வீடியோ கேம்ஸ் கொடுத்து அடிமையாக்கிவிடாதீர்கள்.

பகிர்தல் : வளர்ந்த பிள்ளை, சொன்னால் புரிந்துகொள்ளும் பிள்ளைகள் எனில் வீட்டு வேலைகளை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அவற்றை சிறப்பாக செய்தால் பாராட்டு தெரிவித்தல், பரிசு தருதல் என ஊக்குவியுங்கள்.

விளையாட்டு : ஓய்வாக இருக்கும் நேரத்தில், மாலை நேரத்தில் குடும்பமாக இணைந்து இண்டோர் கேம்ஸ் விளையாடுங்கள்.

தனி அறை : குழந்தைகளிடமிருந்து விலகியிருக்கும் வண்ணம் தனி அறையில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளுங்கள். திடீர் கான்கால் மீட்டிங், வீடியோ கால்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

நேரம் ஒதுக்குங்கள் : இதற்கிடையில் உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதும் அவசியம். அப்போதுதான் உங்கள் மனநிலையும் ரிலாக்ஸாக இருக்கும். அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

குறிப்பு : அனைத்து நேரங்களிலும் அனைவராலும் சிறப்பாக எதையும் செய்துவிட முடியாது. தவறுகள் வருவது சகஜம். நெருக்கடிகள் வருவதும் எதிர்பாராதவை. எனவே அவற்றை நினைத்து வருத்தப்படாமல் சமாளிக்கும் துணிச்சலை வளர்த்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நிரந்தரமாக்குங்கள்.

பவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்


சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது.

Continue reading →