அதகளம் செய்யும் பிள்ளைகளை அமைதியாக உட்காரவைக்க சில ஜாலி ஐடியாக்கள்!

இந்த `ஸ்டே அட் ஹோம்’ நேரத்தில் குழந்தைகள் வீட்டுக்குள்ளே பலவிதமான க்ரியேட்டிவ் விஷயங்களைச் செஞ்சுட்டு இருக்கிறது சந்தோஷமான

விஷயம். ஆனா, இவங்க போடற கூச்சலில் வொர்க் ஃப்ரம் ஹோம்ல இருக்கிற எங்களுக்கு நிறைய டிஸ்டர்ப் ஆகுது. ரெண்டு, மூணு பிள்ளைகள் இருக்கிற வீடுன்னா சொல்லவே வேண்டாம். திடீர் திடீர்னு உள்வீட்டு யுத்தம் நடத்த ஆரம்பிச்சுடறாங்க. இவங்களை சைலன்ட் பண்றதுக்கு ஐடியா இருந்தா சொல்லுங்கப்பா என்று பல பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

பிள்ளைகளை அமைதியாக உட்கார வைக்கிறது அவ்வளவு சாதாரண விஷயமா? நாம கொடுக்கும் விஷயத்தில் க்ரியேட்டிவிட்டியும் ஜாலியும் இருந்தால்தான் அப்படி அமைதியா உட்கார்ந்து செய்வாங்க. அதுக்கு இங்கே சில ஐடியாக்கள்…

kids

எண்ணி எண்ணி உருவாக்கு!

எத்தனை நாளைக்குத்தான் நோட்டுப் புத்தகத்திலும் கம்ப்யூட்டரிலும் எழுதிக்கிட்டு இருக்கிறது. ஒரு ஜாலிக்காக அரிசி, பருப்பு என மளிகைப் பொருள்களில் எண்களையும் எழுத்துகளையும் உருவாக்கச் சொல்லுங்க. “ஆளுக்கு ஒரு கிலோ அரிசி அல்லது பருப்பு கொடுத்துடுவேன். அதைவெச்சு எவ்வளவு நேரத்துல எத்தனை எண்கள், இல்லைன்னா எழுத்துகளை உருவாக்கறீங்கன்னு பார்ப்போம். தனித்தனியா வேற வேற இடத்துல உட்கார்ந்துட்டு செய்யணும்” என்று சவால் விடுங்க.

செய்தித்தாள் அல்லது பெரிய தட்டுகளில் அரிசி அல்லது பருப்புகளை ஒன்றுக்கு கீழ் ஒன்றாக வைத்து பெயர்களை வர வைக்கணும். அப்படி உருவாக்கினதில் எத்தனை அரிசி அல்லது பருப்புகள் இருக்குன்னு எண்ணி வெச்சுக்கணும். யார் குறைந்த அரிசியில் முழுசா உருவாக்கறாங்க என்பது கூடுதல் திறமை.

வீடு, மரம், சூரியன், மனிதன் என உருவங்களையும் உருவாக்கலாம். அதிலும், 100 பருப்புகளை வெச்சே ஒரு வீடு வர வைக்கணும். 200 அரிசிகளை வெச்சு இயற்கைக் காட்சியை வர வைக்கணும் என்றெல்லாம் சவால் கொடுக்கலாம். அமைதியாக உட்கார்ந்து கவனமாகச் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. அவங்க முடிக்கிற வரைக்கும் நம்ம வேலையைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் செய்யறதுக்கு முன்னாடி, கைகளைச் சுத்தமா கழுவிக்கச் சொல்லுங்க. முடிச்ச பிறகு அரிசி மற்றும் பருப்புகளை வீணாக்காமல், மறுபடியும் சமையல் அறையில் அதுக்கான இடத்தில் வெச்சுடச் சொல்லுங்க.

kids

பார்த்து பார்த்து ஓவியமாக்கு!

வீட்டின் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை என ஒவ்வொரு இடத்திலும் இருக்கிற பொருள்களைக் கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்துக்கணும். அப்புறம், அதையெல்லாம் ஓவியமாக வரையணும். ஓவியம் பக்காவா இருக்கணும்னு அவசியமில்லை. ஆனா, எந்த ஒரு பொருளும் மிஸ் ஆகிடாமல் இருக்கணும்.

சமையலறையில் வரிசையா 20 டப்பாக்களை அடுக்கி வெச்சிருந்தா, அந்த இருபதும் ஓவியத்தில் இருக்கணும். அதில் எல்லாம் என்ன இருக்குன்னும் ஓவியத்திலேயே சின்னதா எழுதிக்கணும். ஒவ்வொரு பொருளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்னு தோராயமா ஒரு கணக்கும் போட்டு வைக்கச் சொல்லுங்க. அப்புறமா, அந்த ஓவியத்தை வெச்சுட்டு நீங்க டிக் அடிச்சுக்கிட்டே ஜட்ஜ்மென்ட் பண்ணலாம்.

கேட்டு கேட்டு கவிதையாக்கு!

ஹெட்போன் மாட்டிக்கிட்டு தமிழ் அல்லது ஆங்கிலப் பாடல்களை அமைதியா முழுசா கேட்கணும். அப்படிக் கேட்டதைத் தமிழில் இருந்தால் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்தால் தமிழிலும் மொழிபெயர்ப்பு செஞ்சு பேப்பரில் எழுதிக் காட்டணும்.

இதையே வெவ்வேறு விதமாகவும் செய்யலாம். கேட்ட பாடல்களைக் கடைசி வரியிலிருந்து தலைகீழாக எழுதிக் காண்பிக்கச் சொல்லலாம். அதே மெட்டுக்கு வேற வார்த்தைகளைப் போட்டு சொந்தமா பாட்டு எழுதச் சொல்லலாம். பாடல் மட்டும் இல்லாமல் கதை, பேச்சு என எதையும் ஒருமுறை முழுமையாகக் கேட்டுட்டு எழுதிக் காட்டணும். எந்த அளவுக்கு கவனிக்கறீங்க பார்க்கலாம்னு சவால் விடலாம்.

kids

நினைச்சு நினைச்சு அட்டவணையாக்கு!

“ஸ்கூல் பக்கம் போயே ரொம்ப நாள் ஆகிடுச்சு இல்லியா? கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து யோசிச்சு பாரு. உனக்குப் பிடிச்ச டீச்சர், எந்தெந்த நாளில் உன்னைப் பாராட்டினாங்க, எதுக்கெல்லாம் பாராட்டினாங்க, உன் ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து ஸ்கூலில் என்னவெல்லாம் விளையாடினீங்க? ஜாலியா பேசிக்கிட்ட விஷயங்களில் எதெல்லாம் இன்னமும் மறக்காம இருக்கு. அதை யார் யார் சொன்னதுன்னு குறிச்சுட்டே வா. அப்புறமா, இதைப் பற்றி போன் பண்ணி ஃபிரண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணு. அவங்களும் சந்தோஷப்படுவாங்க” என்று ஒரு டாஸ்க் கொடுங்க.

நிறைய விஷயங்களை நினைச்சுப் பார்க்க வாய்ப்பா இருக்கும். ஸ்கூல் நடந்த ஈவன்ட், ஃபேமிலியில் நடந்த ஈவன்ட், சுற்றுலாவுக்குப் போனது, அப்போது பேசின விஷயங்கள், பார்த்த காட்சிகள், நடந்த சந்தோஷமான விஷயங்கள்னு அட்டவணைப்படுத்த சொல்லுங்க.

இப்படி அவங்களை அமைதியாக உட்காரவெச்சு பலவிதமான டாஸ்க் கொடுத்துட்டு, உங்க வேலையைக் கவனிங்க. அப்புறமா, அந்த டாஸ்க் மூலம் கிடைக்கும் சந்தோஷமான விஷயங்களைப் பேசி பகிர்ந்துக்கங்க.

%d bloggers like this: