தளர்த்தப்படும்.. மோடி சொன்ன அந்த நம்பிக்கை வார்த்தை.. பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

எதிர்பார்த்தபடியே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. என்றாலும் ஏப்ரல் 20க்கு பிறகு கட்டுப்பாடுகளில் தளர்வு கண்டிப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி ஆறுதலும், நம்பிக்கையும் கலந்த தகவல் ஒன்றை அவரது உரையில்

குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு மக்களாகிய நாம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் நடக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தப்படி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.. அப்போது, மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மிக மிக முக்கியமான அறிவிப்பு இதுதான் என்றாலும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கை, அட்வைஸ்களை தந்தார்.. அதன்படி, புதிதாக யாருக்கும் தொற்று வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், மேலும் மரணங்கள் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்..

உரை

மோடி உரையில் குறிப்பிட்டுள்ள ஒரு அம்சம் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில தளர்வுகள் கொண்டுவரப்படும் என்பதுதான்.. இதுபற்றிய விதிமுறைகள் நாளை அறிவிக்கப்படும் என்று சொல்லி உள்ளார். தளர்வுகள் என்பதுதான் நமக்கு இப்போதைய முதல் தேவையாக உள்ளது.

ஏழைகள்

ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளுமே முடக்கப்படுவதை, அனைத்து தரப்பினருமே முடங்கியிருப்பதைவிட இந்த தளர்வுகள் பாதிப்புகள் அல்லாதவைகளுக்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கக்கூடும்.. பல ஏழைகளின் நிலைமையை கவனத்தில் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் சொல்லி உள்ளதும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்துள்ளதும் ஆறுதலை தந்துள்ளது.

முதலில் கேரளாவுக்குத்தான் மிகப் பெரிய அளவில் தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது… கேரளாவில் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது… கிட்டத்தட்ட கொரோனாவிலிருந்து விடுபடும் நிலையை நோக்கி நடை போட ஆரம்பித்து விட்டது… ஜனவரி மாதத்தில் இருந்தே கேரளாவில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு விட்டது.. இத்தனைக்கும் மத்திய அரசு அந்த மாநிலத்துக்கு மிகவும் சொற்ப தொகையையே ஒதுக்கியிருந்ததாக சொல்லப்பட்டது.

தொற்று

இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2வது இடத்தில் இருந்த கேரள அரசு இன்று இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. இதேபோல மேலும் சில மாநிலங்களிலும் கூட பாதிப்புகள் குறைவாக காணப்படுகின்றன… இங்கெல்லாம் ஊரடங்கில் மாற்றங்கள் இருக்கலாம்.. தளர்வுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டம்

தமிழகத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிப்பு இல்லை என்று தமிழக அரசு சொல்லி வருகிறது. சென்னை, திருப்பூர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக தளர்த்த முடியாத சூழல்.. எனவே பாதிப்பே இல்லாத மாவட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

பணிகள்

ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் கூட மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்தப் பகுதிகள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. அதனால் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் இடங்களில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற ஆறுதல் செய்தி நமக்கு மோடியின் உரைமூலம் கிடைத்துள்ளது. இதே போல பிற பகுதிகளும் மாற வேண்டுமானால் அங்குள்ள மக்கள் முழுமையாக ஒத்துழைத்து வீட்டோடு அடங்கியிருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

%d bloggers like this: