சுயசுத்தம்… தலை முதல் வீட்டுத் தரை வரை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!

வீட்டின் சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தரை, சுவர் உள்ளிட்ட இடங்களை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைத்துப் பராமரிக்க வேண்டும்.

கைகளை ஹேண்ட்வாஷ் கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது, ஒவ்வொருவரும் தங்கள் உடலின் சுத்தத்தைப் பராமரிப்பது, வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்வது… உள்ளிட்ட அடிப்படை சுகாதார முறைகள் எப்போதும் பின்பற்றக்கூடியவைதான் என்றாலும், ஏனோ அவற்றில் கவனம் செலுத்தத் தவறிவிடுகிறோம். தற்போது, கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘செல்ஃப் ஹைஜீன்’ எனப்படும் சுயசுத்தத்தின்மீது நம் அனைவரின் கவனமும் குவியத் தொடங்கியுள்ளது.

ஒரு நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தன் சுத்தத்தைப் பராமரிப்பது ஒன்று மட்டுமே அதிலிருந்து நாம் தப்பிப்பதற்கான வழி என்பதைக் கடந்த ஒருமாத காலத்தில் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளோம். எனவே, ஒருவர் எந்தெந்த வழிகளில் எல்லாம் தன் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயற்கை மருத்துவர் தீபா கூறும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக…

2
கை சுத்தம்

கை சுத்தம்

கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது அடிப்படை சுகாதார முறைகளில் முதன்மையானது. கை கழுவுகிறோம் என்ற பெயரில், பெரும்பாலும் நாம் தண்ணீரில் கைகளை நனைத்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். கை கழுவுவதற்கு என்று சில முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். கைகளைக் கழுவ சோப் அல்லது ஹேண்ட்வாஷை பயன்படுத்தலாம். 15 – 20 விநாடிகள் வரை ஒதுக்கி, கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். கை விரல்கள், நகங்கள், விரல் இடுக்குகள், உள்ளங்கை, புறங்கை, மணிக்கட்டு போன்ற இடங்களை அழுத்தித் தேய்த்து, அங்குள்ள அழுக்குகள் போகும்படி நன்றாகக் கைகழுவ வேண்டும்.

சாப்பிடும் முன்பும் பின்பும், சமைக்கும் முன்பும், கழிவறை சென்று வந்த பிறகும், அசுத்தமான பொருள்கள், தூசு, குப்பை முதலானவற்றைத் தொட நேர்ந்த பிறகும் கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும். அசுத்தமான கைகளைக் கொண்டு முகம், வாய், குழந்தைகள், உணவு முதலானவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். வாரந்தோறும் நகங்களை வெட்டி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

பல் சுத்தம்

வாயில் ஏற்படும் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் வாய் மற்றும் பற்களை சரியாகப் பராமரிக்காத காரணத்தின் விளைவுகளே. வாய் அசுத்தமாக இருக்கும்போது, அங்கிருக்கும் கிருமிகள், நாம் உணவு உட்கொள்ளும்போது உணவுடன் சேர்ந்து வயிற்றுக்குள் இறங்கி அஜீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, இவற்றைத் தவிர்க்க வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம்.

காலையில் எழுந்தவுடனும், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும் பற்களை நன்றாகத் துலக்க வேண்டும். அசைவ உணவுகளைச் சாப்பிட்ட பிறகும் பல் துலக்குவது நல்லது. நன்றாகப் பல் துலக்குகிறேன் என்ற பெயரில், பல்லின் எனாமல் பகுதி தேயும் அளவுக்கு பிரஷ் கொண்டு தேய்க்கவேண்டிய அவசியம் இல்லை. பல் துலக்குவதற்கு இரண்டு நிமிடங்களே போதும். அதற்குக் குறைவாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. மாதம் ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

 
 

உடல் சுத்தம்

நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்கவும், ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளவும் நாம் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு விஷயம், உடல் சுத்தம். தங்கள் உடலின் தூய்மையைப் பராமரிப்பவர், அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை, மாலை இரண்டு வேளையும் குளிக்கவேண்டியது அவசியம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை குளிப்பதற்கென்று ஒதுக்க வேண்டும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப், ஷாம்பூ முதலானவற்றைக் கொண்டு பாதம், கை, கால் நகங்கள், மடிப்புகள், வியர்வை சுரக்கும் இடங்கள் போன்ற அழுக்கு சேரும் இடங்களை நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க வேண்டும்.

5
தலை சுத்தம்

தலை சுத்தம்

நாம் தலையில் எண்ணெய் வைத்தாலும், வைக்கவில்லை என்றாலும் அங்கு இறந்த செல்கள் இருந்துகொண்டே இருக்கும். இந்த இறந்த செல்கள், தலையின் தோல் பகுதியில் ஒரு மெலிதான லேயராக இருக்கும். நாம் தலை மற்றும் தலைமுடியின் சுத்தத்தில் சரியான கவனம் செலுத்தாதபோது, இந்த செல்களே அடை அடையாக மாறி தலையில் பொடுகு, பேன் போன்றவை உருவாகக் காரணமாகும். எனவே, வாரத்துக்கு இரண்டு முறையாவது தலைக்குக் குளிக்கவேண்டும். அப்படிக் குளிக்கும்போது தலைமுடியை நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும். தலைக்குக் குளித்த பிறகு, கேசத்தை நன்றாக உலரவைக்க வேண்டும்.

6
ஆடைத் தூய்மை

ஆடைத் தூய்மை

நம் உடல்நலத்தில் நாம் உடுத்தும் ஆடைகளுக்கும் பங்குண்டு. வெளியில் செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் நன்றாகத் துவைத்த, தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும். சிலர், ஒருநாள் அணிந்த ஆடைகளைத் துவைக்காமல் மற்றொரு நாள் அணிவார்கள். இதுபோல் செய்வது உடலில் துர்நாற்றத்தையும், சரும வியாதிகளையும் ஏற்படுத்தும். தூய்மையான ஆடைகளே எப்போதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

நாம் உடுத்தும் ஆடைகளைத் தூய்மையான நீரில் சோப்பு போட்டு நன்றாகத் துவைக்கவேண்டியது அவசியம். துவைத்த ஆடைகளை வெயிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். குறிப்பாக, உள்ளாடைகளைக் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தித் துவைக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் அணிந்திருக்கும் உடைகளை வெந்நீரில் ஊறவைத்த பின்பு துவைத்துக் காயவைத்து அணிந்துகொள்ளும்போது, நோய்த்தொற்றைத் தவிர்க்கலாம். ஒருபோதும் ஈரமான உடைகளை அணியக்கூடாது.

வீட்டுத் தூய்மை

சுகாதாரமான உணவு

உடல் சுத்தத்தில் கவனம் செலுத்துவதுபோல நாம் உண்ணும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான காய்கறிகள், சமையல் பொருள்களைப் பயன்படுத்தியே உணவு தயார்செய்ய வேண்டும். உணவு தயார் செய்வதற்கு முன்பும், உணவுப் பொருள்களைத் தொடுவதற்கு முன்பும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். உணவுப் பொருள்களை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். வெளியில் உள்ள கடைகளில் சாப்பிட நேரும் சமயங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் உள்ள தரமான உணவகங்களிலேயே சாப்பிட வேண்டும். சாப்பாடு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் நபர் தூய்மையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். கெட்டுப்போன உணவுகளை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.

 
வீட்டுத் தூய்மை

நம் அகத்தூய்மை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு, நாம் வசிக்கும் இடத்தின் புறத்தூய்மையும் முக்கியம். வீட்டின் சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தரை, சுவர் உள்ளிட்ட இடங்களை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைத்துப் பராமரிக்க வேண்டும். வீட்டின் கழிவறை மற்றும் குளியலறையை வாரத்துக்கு இரண்டு முறை சுத்தம்செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பொருள்களில் தூசுகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள தேவையில்லாத பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தி குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் எல்லா பொருள்களையும் கண்ட இடங்களில் வைக்காமல், ஒரு ஒழுங்குடன் வரிசைப்படுத்தி வைக்கவேண்டியது முக்கியம்.

9
செல்லப் பிராணிகள்

நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும் அவற்றிலிருந்து ஏதாவது நோய் பரவ வாய்ப்புள்ளதால், அவற்றைக் கையாள்வதில் கவனம் தேவை. செல்லப் பிராணிகளுக்கென்று வீட்டில் தனி இடம் ஒதுக்குவது சிறந்தது. அவற்றுக்கு உரிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். சமையலறைக்குள் அவற்றை அனுமதிக்கக் கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு அருகே செல்லப் பிராணிகளை அனுமதிக்கக் கூடாது. செல்லப் பிராணிகளைத் தொட்ட பிறகும், அவற்றுடன் விளையாடிய பிறகும் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். சிலருக்கு நாய், பூனை போன்றவற்றால் அலர்ஜி ஏற்படும். அவர்கள், அந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும்.

%d bloggers like this: