ராசியா? லக்னமா? லக்னம் என்றால் என்ன? உங்கள் பலனை துல்லியமாக எதை வைத்து ஜோதிடம் பார்ப்பது?

ஜாதகத்தை பார்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஜாதகம் பார்த்து நம்மிடம் சரியாக தான் பலன் சொல்கின்றார்களா? என்று யாருக்கு தெரியும்? முந்தைய காலங்களில் திறமையான ஜோதிடர்கள் இருந்தனர்.

இன்றைய நிலையில் யார் சரியாக சொல்வார்கள் என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இன்று மேலோட்டமான பலன் சொல்பவர்களே மிகுதியாக இருக்கின்றனர். ஜோதிடர்கள் நம் ஜாதகத்தை வைத்து நம்மை பற்றிய முக்காலத்தையும் பொதுவாக பலன் கூற வேண்டும். நாமாகவே நம்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய கேள்விகளுடன் ஜோதிடர்களை நம்பி செல்கிறோம். நாம் கேட்கும் கேள்விக்கு மட்டும் மேலோட்ட பதிலை அளித்து விடுகின்றனர். வீட்டிற்கு வந்தும் ஜாதகம் பார்த்த திருப்தி கூட இருப்பதில்லை. மறுபடியும் வேறொரு நபரை தேடி அலைகிறோம். ஜோதிடம் என்பது மனித வாழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை. அதை சரியாக பயன்படுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை. லக்னம் என்றால் என்ன? லக்னத்தை வைத்து பலன் பார்ப்பது முறையா? ராசியை வைத்து பலன் பார்ப்பது முறையா? பலரும் குழம்பி கொள்ளும் விஷயம் இது. இதை பற்றிய அலசல் இதோ..

<img class="i-amphtml-intrinsic-sizer" alt="" aria-hidden="true" role="presentation" src="data:image/svg+xml;charset=utf-8,” style=”box-sizing: border-box; max-width: 100%; display: block !important;”>navagraga

மனிதனின் ஜாதகம் அவன் பிறந்த நேரத்தை வைத்து அப்போது இருக்கும் வானியல் கிரக அமைப்புகளின் அடிப்படையில் ஜாதகம் எழுதப்படுகிறது. 9 கிரகங்கங்கள் ஒரு மனிதனின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்று அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதே அற்புதமான விஷயம் தான். ஜாதகத்தை கணிப்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நுண்ணிய அறிவாற்றல் கொண்டிருக்க வேண்டும். ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி இந்த மூன்றும் முக்கியமாக குறிக்கப்பட்டிருக்கும். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இதில் எதை வைத்து பலன் சொல்கிறார்கள் என்றே பலருக்கும் புரியாத புதிராக இருக்கும்.

தமிழரின் வருட பிறப்பு சித்திரை தானே? தமிழில் ஏன் சித்திரையை முதல் மாதமாக பார்க்கப்படுகிறது? சித்திரையில் தான் சூரியன் மேஷ ராசியில் உதயமாகிறது. 2 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். பின்பு அடுத்த ராசியான ரிஷபத்திற்கு சென்று விடும். இது ஒரு சுழற்சி முறை. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை லக்னமாக குறிப்பிடுகிறார்கள். லக்னம் தான் முதல் கட்டம். லக்னம் என்பது மாற்ற முடியாத விஷயமாகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உங்களது ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டதிற்குள் உங்களது போன ஜென்மம், இந்த ஜென்மம், அடுத்த ஜென்மம் என்று அனைத்தையும் குறித்து விடலாம். இதில் லக்னம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன் ஜென்ம பாவங்கள், புண்ணியங்களை குறிக்கிறது. அதை மாற்ற முடியாது. ஜனனம், மரணம் எப்படியோ லக்ன பலன்களும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இதையே விதி என்கிறோம்.

<img class="i-amphtml-intrinsic-sizer" alt="" aria-hidden="true" role="presentation" src="data:image/svg+xml;charset=utf-8,” style=”box-sizing: border-box; max-width: 100%; display: block !important;”>birth-star

ஜென்ம நட்சத்திரம் உங்களின் நிகழ்கால வாழ்க்கையை இயக்கி கொண்டிருப்பவை. குழந்தை பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திர காலில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் ஜென்ம நட்சத்திரமாக குறிப்பிடுகிறார்கள். நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றாலும் நட்சத்திர அடிப்படையில் உங்களை கிரகங்கள் இயக்கி கொண்டிருக்கும். நீங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும், எதையெல்லாம் வாங்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று அனைத்தையும் தீர்மானிக்கும். இதுவும் வேறு வழி இல்லை. நாம் எப்படி இருக்க போகிறோம் என்று நமக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்?

ஜனன நேரத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே உங்களது ஜென்ம ராசியாக இருக்கும். முகூர்த்தம் பார்ப்பது, சுப காரியங்கள் செய்வது, வீடு காட்டுவது என்று எந்த நல்ல காரியத்திற்கும் ராசியை வைத்தே பொதுபலன் பார்க்கிறோம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு சிலர் தாங்களாகவே நாட்காட்டியின் மூலமோ, இன்ன பிற செயலிகளின் மூலமோ கூறப்படும் பலன்களை வைத்து ஜோதிடம் அறிகிறார்கள். அவை யாவும் பொதுவாக சொல்லப்படும் பலன்கள் தான். உண்மையில் உங்களது லக்னத்தின்படி உங்களையுடைய அடிப்படை பலனை முதலில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதுவே ஆதி பலன். அதை அறிந்து வைத்திருந்து பின்னர் தசாபுத்திகளின் படி ராசி பலன் பார்ப்பது சரியாக இருக்கும்.

<img class="i-amphtml-intrinsic-sizer" alt="" aria-hidden="true" role="presentation" src="data:image/svg+xml;charset=utf-8,” style=”box-sizing: border-box; max-width: 100%; display: block !important;”>

நீங்கள் விரும்பியதை அடைய மதியை வைத்து தான் விதியை வெல்ல முடியும். எழுதப்பட்ட விதியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லவா? நாம் விரும்பியது நடக்க தானே ஆசைபடுவோம்? அதற்கு மதியை பயன்படுத்த வேண்டும். எந்த கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது? எந்த கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருக்கிறது? என்பதை பாருங்கள். கிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது ராசி அடிப்படையில் பலன் பார்க்கலாம்.

ஒரு விஷயத்தில் இத்தனை வருட காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினால் அதன் படி நல்ல நேரம் வரும் வரை பொறுத்திருந்து செயலாற்றுவது தான் நல்லது. நேரமில்லை என்று உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜோதிடம் குறித்தால் அதில் பலனும் இல்லை. உங்களின் கர்ம வினை பயன்கள் கட்டாயம் வந்தே தீரும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சரியாக ஜோதிட பலன் பார்ப்பது ஒன்றே வழியாக இருக்கும்.

%d bloggers like this: