ஆக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசி ChAdOx1 nCoV-19.. கொரோனா வைரஸ் போலவே நடித்து காலி செய்யும் டெக்னிக்

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 நாளை முதல் மனிதர்களிடையே சோதனை செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பூசி நமது உடலில் சென்று எப்படி செயல்படும், எப்படி கொரோனா வராமல் தடுக்கும் என்று சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பு மருந்து எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், பொதுவாக ஒரு நோய்தடுப்பூசி எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நம்மை ஒரு வைரஸ் தாக்கினால் அது உடலில் சென்று, அங்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களோடு சண்டை போடும். இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் அந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும்.

இப்படித்தான் காலம் காலமாக மனித இனம் நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து தப்பித்து வருகிறது. நமக்கு உடலின் வெள்ளை அணுக்களில் இருக்கும் இந்த எதிர்ப்பு சக்தி செல்கள்தான் இத்தனை வருடங்களாக மனிதர்களை உயிர்ப்போடு வைத்து இருக்கிறது.

பொதுவா எப்படி செயல்படும்
ஆனால் சில மோசமான வைரஸ்கள் தாக்கும் போது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை எப்படி தாக்கி அழிப்பது என்று தெரியாது. இதற்காகத்தான் தடுப்பூசி என்பதை உருவாக்கி உள்ளனர். தடுப்பூசி என்பது ஒன்றும் இல்லை. ஒரு வைரஸை எடுத்து அதன் நோய் தாக்கும் சக்திகள் அனைத்தையும் அழித்துவிட்டு அதை மலட்டுத்தனமான ஒரு வைரஸாக மாற்றுவார்கள்.

உள்ளே அனுப்புவார்கள்
இந்த செயல் இழந்த வைரஸை உடலில் செலுத்துவதுதான் தடுப்பூசி. இந்த வைரஸ் உடலில் சென்றாலும் நமக்கு ஆபத்து இருக்காது. ஏனென்றால் அதை மட்டுப்படுத்திவிட்டனர். இந்த நிலையில் உடலில் சென்ற இந்த வைரஸை பார்த்ததும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வேகமாக செயல்பட்டு அதை அழிக்கும். அதோடு அந்த வைரஸை எப்படி அழித்தோம் என்பதை நினைவில் கொள்ளும்.எப்போதும் நினைவில் வைத்து இருக்கும்
அதாவது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன், இந்த செயலை எப்படி செய்தோம் என்று நினைவில் வைத்து இருக்கும். அடுத்தமுறை உண்மையிலேயே அந்த வைரஸ் உடலை தாக்கினால், அப்போது மிக சரியாக செயல்பட்டு உடனே நமது நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸை அழிக்கும். இதுதான் தடுப்பூசி செயல்படும் முறை.

வருகிறது சோதனை
கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவில் சில மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளன. இதன் சோதனை நாளையில் இருந்து மனிதர்களிடம் செய்யப்பட உள்ளது. அரசு இதற்கு 20 மில்லியன் யூரோ நிதி உதவி அளித்துள்ளது.

தடுப்பூசிக்கு பெயர் என்ன
தற்போது கொரோனாவிற்கு எதிராக இவர்கள் கண்டுபிடித்து இருக்கும் தடுப்பூசிக்கு பெயர் ”ChAdOx1 nCoV-19” என்பதாகும். இது ஒரு கோட் பெயர் ஆகும். இதை விளக்கமாக chimpanzee adenovirus vaccine vector (ChAdOx1) என்று கூறலாம். ChAdOx1 வகை தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது ஆகும். இந்த வகை தடுப்பூசிகள் உடலில் மிக வேகமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என்று பலருக்கும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம்.

செய்திகள் breadcrumb லண்டன்
ஆக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசி ChAdOx1 nCoV-19.. கொரோனா வைரஸ் போலவே நடித்து காலி செய்யும் டெக்னிக்
By Shyamsundar I
Updated: Wed, Apr 22, 2020, 20:10 [IST]

லண்டன்: கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 நாளை முதல் மனிதர்களிடையே சோதனை செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பூசி நமது உடலில் சென்று எப்படி செயல்படும், எப்படி கொரோனா வராமல் தடுக்கும் என்று சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக இந்த தடுப்பு மருந்து எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், பொதுவாக ஒரு நோய்தடுப்பூசி எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நம்மை ஒரு வைரஸ் தாக்கினால் அது உடலில் சென்று, அங்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களோடு சண்டை போடும். இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் அந்த வைரஸ் கிருமிகளை அழிக்கும்.

இப்படித்தான் காலம் காலமாக மனித இனம் நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து தப்பித்து வருகிறது. நமக்கு உடலின் வெள்ளை அணுக்களில் இருக்கும் இந்த எதிர்ப்பு சக்தி செல்கள்தான் இத்தனை வருடங்களாக மனிதர்களை உயிர்ப்போடு வைத்து இருக்கிறது.

பொதுவா எப்படி செயல்படும்
ஆனால் சில மோசமான வைரஸ்கள் தாக்கும் போது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை எப்படி தாக்கி அழிப்பது என்று தெரியாது. இதற்காகத்தான் தடுப்பூசி என்பதை உருவாக்கி உள்ளனர். தடுப்பூசி என்பது ஒன்றும் இல்லை. ஒரு வைரஸை எடுத்து அதன் நோய் தாக்கும் சக்திகள் அனைத்தையும் அழித்துவிட்டு அதை மலட்டுத்தனமான ஒரு வைரஸாக மாற்றுவார்கள்.

உள்ளே அனுப்புவார்கள்
இந்த செயல் இழந்த வைரஸை உடலில் செலுத்துவதுதான் தடுப்பூசி. இந்த வைரஸ் உடலில் சென்றாலும் நமக்கு ஆபத்து இருக்காது. ஏனென்றால் அதை மட்டுப்படுத்திவிட்டனர். இந்த நிலையில் உடலில் சென்ற இந்த வைரஸை பார்த்ததும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வேகமாக செயல்பட்டு அதை அழிக்கும். அதோடு அந்த வைரஸை எப்படி அழித்தோம் என்பதை நினைவில் கொள்ளும்.

எப்போதும் நினைவில் வைத்து இருக்கும்
அதாவது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன், இந்த செயலை எப்படி செய்தோம் என்று நினைவில் வைத்து இருக்கும். அடுத்தமுறை உண்மையிலேயே அந்த வைரஸ் உடலை தாக்கினால், அப்போது மிக சரியாக செயல்பட்டு உடனே நமது நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸை அழிக்கும். இதுதான் தடுப்பூசி செயல்படும் முறை.

வருகிறது சோதனை
கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவில் சில மருந்துகள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளன. இதன் சோதனை நாளையில் இருந்து மனிதர்களிடம் செய்யப்பட உள்ளது. அரசு இதற்கு 20 மில்லியன் யூரோ நிதி உதவி அளித்துள்ளது.

தடுப்பூசிக்கு பெயர் என்ன
தற்போது கொரோனாவிற்கு எதிராக இவர்கள் கண்டுபிடித்து இருக்கும் தடுப்பூசிக்கு பெயர் ”ChAdOx1 nCoV-19” என்பதாகும். இது ஒரு கோட் பெயர் ஆகும். இதை விளக்கமாக chimpanzee adenovirus vaccine vector (ChAdOx1) என்று கூறலாம். ChAdOx1 வகை தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது ஆகும். இந்த வகை தடுப்பூசிகள் உடலில் மிக வேகமாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். குழந்தைகள், பெரியவர்கள் என்று பலருக்கும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம்.

இது ஒரு பொதுவான வைரஸ்
ஏற்கனவே 10க்கும் அதிகமாக நோய்களுக்கு இந்த வகையை பயன்படுத்தி தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி ‘adenovirus vaccine vector’ எனப்படும் தொழில்நுட்பத்தை வைத்து செயல்படுகிறது. adenovirus என்பது ஒரு பொதுவான வைரஸ் ஆகும். இது ஜலதோஷம், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடிய வைரஸ் ஆகும். இந்த வைரசுக்குள் கொரோனாவைரசின் சிதைக்கப்பட்ட மரபணுவை ஏற்றி அதை உருவத்தில் கொரோனா வைரஸ் போல மாற்றுவார்கள்.

மிமிக் கொரோனா வைரஸை உருவாக்குவார்கள்
அதாவது adenovirus வைரஸை வைத்து ஒரு மிமிக் கொரோனா வைரஸை உருவாக்குவார்கள். ஆனால் இதற்கு எந்த விதமான சக்தியும் இருக்காது. இதன் பலம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த adenovirus தான் தடுப்பூசிக்கான மருந்துகளை சுமந்து கொண்டு உடலுக்குள் செல்லும். நோய் கிருமிகளை சுமந்து செல்லும் பூச்சிகள், நுண்ணியிருக்குப் பெயர் தான் வெக்டர். இந்த வைரசும் கொரோனாவைரசுக்கு எதிரான மரபணு கோட் வேர்டுகளை சுமந்து செல்வதால் இதை ‘adenovirus vaccine vector’ என்ற தொழில்நுட்பத்துக்குள் அடக்குகிறார்கள்.

கூம்புகள்தான் முக்கியம்
கொரோனா வைரஸில் வெளிப்புறம் முழுக்க புரோட்டீன்களாஸ் ஆன கூம்புகள் இருக்கும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த கூம்புகளைத் தான் குறி வைக்கப் போகிறது. இந்த தடுப்பூசி உடலுக்குள் போனதும் கொரோனோவைரசின் மேலே உள்ளது போல கூம்புகளை செயற்கையாக லட்சக்கணக்கில் உடலில் உருவாக்கும். இதற்கு ஆண்டிஜென் என்று பெயர்.

தாக்கி அழிக்கும்
உடனே நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏதோ ஒரு வைரஸ் வந்துவிட்டு என்று வேகமாக சென்று சண்டை போடும். இந்த ஆண்டிஜென்களுக்கு எதிராக ஆண்டிபாடிகள் எனப்படும் தாக்கி அழிக்கும் செல்களை நமது உடல் கோடிக்கணக்கில் உருவாக்கும். அவை தடுப்பூசியில் இருக்கும் கூம்புகளை குறி வைத்து தாக்கி அளிக்கும். (உடலுக்குள் இந்த சண்டை நடக்கும்போது தான் உடலில் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வரும். புள்ளைக்கு தடுப்பூசி போட்டுட்டு வந்தோம், காய்ச்சல் அடிக்குது என்று பெற்றோர், பெரியோர்கள் சொல்வதை நினைவு கூறவும்)

ஆண்டிபாடிகள் மெமரி
இந்த ‘சண்டையை’ நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எப்போதுமே மறக்காது. இந்த ஆண்டிபாடிகளை எப்போதுமே தயாராக வைத்த்ருக்கும். மேலும் தடுப்பூசி ரூபத்தில் தாக்க வந்த வைரசின் வேதியியல் தன்மை, உருவத்தை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்தமுறை உண்மையிலேயே கொரோனா வைரஸ் நம்மை தாக்கினால், தனது நினைவுத்திறன் மூலம் உடனடியாக ஆண்டிபாடிகளை குவித்து வைரஸை தாக்கி அழிக்கும். (இப்போதைய பிரச்சனை, நமது உடலுக்கு இந்த கொரோனாவைரஸைத் தெரியாது என்பது தான். இதனால் அது உடலுக்குள் வந்தவுடன், நமது நோய் எதிர்ப்பு சக்தி தயாராவதற்கு முன்பே பல்கிப் பெருகி, எதிர்ப்பு சக்தியையே குழப்பியடித்து, நல்ல செல்களையே காலி செய்து ஆட்களை கொல்கிறது கெரோனா)

இப்படித்தான் செயல்படும்
இப்படித்தான் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி செயல்படட போகிறது. இங்கிலாந்தில் பல்வேறு பகுதிகளில் இந்த தடுப்பூசி சோதனை நாளையில் இருந்து நடக்க உள்ளது. மொத்தம் 550 பேர் இந்த சோதனையில் கிரேட் லண்டன், சௌதாம்ப்டன், பிரிஸ்டல், தாமஸ் வேலி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் தாமாக முன் வந்து சோதனைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இது உடனே பயன்பாட்டிற்கு வராது.

காத்திருக்க வேண்டும்
இது 80% வெற்றியை தர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்பின் மேலும் மனித சோதனையை விரிவாக்குவார்கள். முழுமையாக முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசி ஒரு பக்கம் சோதனை நடப்பது போலவே இன்னொரு பக்கம் உற்பத்தியும் நடக்கிறது. அதனால் செப்டம்பர் மாதத்திற்குள் இது பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

%d bloggers like this: