கொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள்… அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அலர்ட்

சுவாசிப்பதில் சிக்கல், மார்பு பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம், குழப்பம், உதடுகளும், முகமும் நீல நிறமாக மாறுவதும் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறிகள்.

லகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி, பல உயிர்களைப் பறித்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் பல துறைகளிலும் தினமும் புதிய புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த

நிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை சொல்லப்பட்டு வந்த நிலையில், புதிதாக மேலும் 6 அறிகுறிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அவை குளிர், குளிர் நடுக்கம், தசை வலி. தலைவலி. தொண்டை வலி, சுவை அல்லது வாசனை உணரும் திறன் குறைதல் போன்றவை.

இந்த நிலையில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இணையதளத்தில் “கொரோனா பாதித்தவர்களுக்கு இந்த அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாள்களுக்குள் தென்படலாம்” என சொல்லப்பட்டுள்ளது.

 

உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அறிகுறிகளாகப் பின்வருவனவற்றைக் கூறுகிறது. அவை சுவாசிப்பதில் சிக்கல், மார்பு பகுதியில் தொடர்ச்சியான வலி அல்லது அழுத்தம், குழப்பம், உதடுகளும், முகமும் நீல நிறமாக மாறுவது.

%d bloggers like this: