Monthly Archives: ஏப்ரல், 2020

மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்!

அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். அத்தகைய வாழ்வியல் மாற்றங்களால் என்னென்ன உடல் மற்றும் உள நல சிக்கல்கள் வரக்கூடும்? அதனால் குடும்ப அளவில் எத்தகைய பாதிப்புகள் உண்டாகும் போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய சூழலில் இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.

மாறிப்போன வாழ்வுமுறை Continue reading →

குமரனை தொழுதால் கொடூரநோய் நெருங்காது

இல்லத்தில் இருந்து கொண்டு குமரனை இதயத்தில் நினைத்து கீழ் வரும் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடலை பாடி தொழுேவார்க்கு கொடூர நோய்கள் எதுவும் அண்டாது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போதைய கொரோனா குறித்து அருணகிரிநாதர் கூறியுள்ளார். இருமலுடன், நாசித்தும்மல் நுரையீரல் தொற்று உண்டாகி மூச்சுத்திணறல் வந்து உடலை பாழ்படுத்தும் என்று கூறியதன் மூலம் கொரோனா போன்ற ஒரு நோயை அப்போதே அருணகிரியார் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமல்ல அதைவிடவும் கொடிய நோய்கள் எந்தப்பிறவியிலும் என்னை நெருங்காமல் காத்தருள்வாய் பெருமானே என்று கந்தனை வேண்டி பாடுகிறார்.

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி – விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை- யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு- முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் – அருள்வாயே   
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக – இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை – விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் – மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு -பெருமாளே.

விளக்கம்: இருமல் என்ற நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய் ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடி களைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கடலால் சூழப்பட்ட இந்தப்புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே என்று முருகப்பெருமானை நோக்கி பாடுகிறார் அருணகிரிநாதர்.

ராங்கால் நக்கீரன் 21.4.20

ராங்கால் நக்கீரன் 21.4.20

Continue reading →

ஆக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசி ChAdOx1 nCoV-19.. கொரோனா வைரஸ் போலவே நடித்து காலி செய்யும் டெக்னிக்

கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியான ChAdOx1 nCoV-19 நாளை முதல் மனிதர்களிடையே சோதனை செய்யப்பட உள்ளது. இந்த தடுப்பூசி நமது உடலில் சென்று எப்படி செயல்படும், எப்படி கொரோனா வராமல் தடுக்கும் என்று சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.

Continue reading →

கர்வம் அழித்து கலை வளர்க்கும் கயிலைநாதன்

திருஞானசம்பந்தர் மகா தேவரை தரிசனம் செய்து வரும் காலத்தில் நாயன்மார்களில் சிறந்து விளங்குகின்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியாரும் அவரைத் தரிசிக்க சீர்காழிப் பதி வந்தனர். கண்டனர்; கருத்து ஒருமித்தனர்; பேரானந்தம் அடைந்தனர். சம்பந்தர் பாட, பாணர் யாழ் மீட்டினார். புளங்காங்கிதம் அடைந்தார்.பின்பு ஆளுடைப் பிள்ளையாராகிய சம்பந்தர் பெருமான், பலதலங்களைப் போற்றிய பின் திருத்தருமபுரத்தை அடைந்தார்.அவ்வூர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயின் ஊர், ஞானசம்பந்தர் வருகைக்கு அவ்வூர் பெரிதும் மகிழ்ந்து வரவேற்றது.ஒன்று சொல்லியாக வேண்டும் திருநீலகண்ட யாழ்பாணரிடம், பக்தியும் பொங்கிப்பிரவகித்தலும், அவருமறியாமல் அவருக்குள் தனது யாழ் வாசிப்பினைப் பற்றிய கர்வம் மிகமிகச் சிறிய அளவில் ஒளிந்து கிடந்தது. ஆனால், அவருடைய உற்றார், உறவினர்கள், ‘யாழில் வல்லோன் திருநீலகண்டன்! அவனது யாழ் ஓசையும் இசையும் எட்டுத் திக்கும் வெற்றி முரசு கொட்டும்’ என்ற கர்வத்தில் திளைத்திருந்தனர்.
அந்த கர்வம் ஒடுக்கத் திருவுளம் கொண்ட இறைவன், அதுவும் சம்பந்தப் பெருமான் மூலமாக, விருந்துண்டு முடித்து, பக்திப் பரவசத்தில் திளைக்க எண்ணங்கொண்ட பாணர், ஞானசம்பந்தர் பெருமானிடம் திருப்பதிகம் பாடியருள வேண்டினார். சம்பந்தப் பெருமானும் ‘யாழ் முரி’ எனத் தொடங்கும் பதிகம் ஒன்று பாடினார், அவரின் பதிகத்திற்கு ஏற்ப பண்ணில் யாழ் மீட்டத் தொடங்கினார் பாணர். பதிகம் காற்று வெளிகளில் வளைந்து, நெளிந்து, சுழன்று, குழைந்து, இறைத் தன்மையில் எல்லா இடத்திலும் நிறைந்தது.
ஆனால், திடீரென்று யாழின் வேகம்
குறைந்தது, தடுமாறிற்று, அபஸ்வரம் பிறந்தது.
பாணருக்குப் பெருங்கோபம், யாழின் மீது…
என்ன அருமையாய் இசையெழுப்பும் இது.இன்று ஏன் இப்படி…உள்ளங்குமுற, பெருங்கோபம், தீயாய் கனன்று எழ…யாழைப் பற்றிய கையை மேலே ஓங்கினார், விசையுடன் கீழிறக்கி அந்த இசைக் கருவியினை ஒரேயடியாகச் சிதற அடித்து விட முயன்றார்.சுற்றியுள்ளோர் தவித்தனர். அதிர்ச்சி அடைந்தனர். நம்முடைய திருநீலகண்ட யாழ்பாணரின் யாழ் தவறிழைத்ததா? நம்ப முடியாமல் உறைந்து போயிருந்தனர் அனைவரையும் திருஞானசம்பந்தர் தடுத்தார். “புரிந்து கொள்ளுங்கள் ஏழிசையும், அண்ட சராசரங்களும், எட்டுத்திக்கும் பணியும் பரமனின் புகழ் இந்த யாழின் மூலம் பெருகுமோ? யாழிசை துணை செய்யலாம். ஆனால், இசையால் பெற்றதல்ல எம்பெருமான் துணை.
உங்கள் இசையும், என் பண்ணோசையும் கூடத் தொடமுடியாத இடத்தில் இருப்பதே சிவ பரம்பொருள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ ‘அன்பரே, அடியார்க்கு நல்லவரே, சிவனின் புகழ் பாட முடியாத யாழின் மேல் கோபம் ஏன்? ஏழிசைக்கும் மூல ஆதாரம் அல்லவா அவன்? மௌனகுரு அல்லவா அவன்? ஓசைகளுக்கெல்லாம் ஓசையாயும், ஓசை அடங்குமிடத்தில் விளங்குவதாயும் உள்ளதுதானே, அப்பெருமானின் தன்மை’ என்று பாணருக்கும் எடுத்துரைத்தார்.‘யாழ் நல்லதாய் இசைப்பதில் மகிழ்ந்தது எல்லாம் இறைவனின் கருணை’ எனச் சொன்ன நீங்கள் ‘வாசிக்க முடியாத யாழின் தன்மையும் கூட இறைவனின் கருணையே என்பதை எண்ண ஏன் மறந்தீர்கள்’ என மீண்டும் உரைத்தார் திருஞானசம்பந்தப் பெருமான்.திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியாரும் அவர்தம் உறவினரும், ஞானசம்பந்தர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தனர்.கர்வம் அழிக்கும் இடம், ஆனந்தம் பிறக்கும் இடம் இறைவனின் திருவடிகளேயன்றி வேறென்ன?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு… தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு!

தமிழகத்தில் மூன்று நாள்களில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றாரே முதல்வர்?’’ என்ற கேள்வியை வீசினோம்.

‘‘அதை ஏன் சொன்னோம் என்று முதல்வரே யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. ‘கொரோனா தொற்று, இரண்டு நாள்களாக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகிறது’ என்று சுகாதாரத் துறை கொடுத்த புள்ளிவிவரத்தை வைத்து மூன்று நாள் கணக்கைச் சொன்னார் முதல்வர். ஆனால், அவர் சொன்ன மூன்றாவது நாளில், மூன்று இலக்க எண்ணில் தொற்று பாதிப்பு வந்ததும்

Continue reading →

லாக்டௌனில் எடை அதிகரிக்காமல் பராமரிக்க… 5 எளிய உடற்பயிற்சிகள்!

இந்த உடற்பயிற்சிகள், இடுப்பு மற்றும் மூட்டுப் பகுதியின் இயக்கமும், தசைப் பகுதியின் நெகிழ்வுத் திறனும் மேம்பட்டு, வாழ்நாள் முழுவதும் மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

வீட்டு சமையலில் தயாரான சத்தான, சுவையான உணவு, இடையிடையே தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிகள் என வீட்டிலிருந்து வேலைசெய்யும்போது கிடைக்கும் கூடுதல் கவனிப்பால் எடை கூடிவிடும்.

Continue reading →

எச்சரித்த வல்லுநர் குழு; முடிவுகளை மாற்றிய முதல்வர்..!’ – மே 3 வரை தளர்த்தப்படாத ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு

Continue reading →

ஒரே நாளில் அதிகபட்ச சோதனை; `அலட்சியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா? – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக

Continue reading →

ஆன்லைன் கேம்ஸ்… ஆபத்தாகிவிடாமல் தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்!

கேம் விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் முன், பின் ஆன்லைன் கேம் விளையாடாதவர்கள்கூட, பணம் சம்பாதிக்க நினைத்து அதில் வீழ்கின்றனர்.

Continue reading →