கொரோனாவை காட்டிக்கொடுக்கும் இருமல்!

இருமல் சத்தத்தை வைத்து, ஒருவருக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்று உள்ளதா என்று கண்டறியலாம் என்கின்றனர், சுவிட்சர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள்.கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறி, வறட்டு இருமல். எனவே, தொற்று ஏற்பட்ட நோயாளி இருமும் விதம் மற்றும் அதன் ஒலியை வைத்து, 70 சதவீத துல்லியத்துடன் நோயை கணிக்கலாம் என்கின்றனர், சுவிட்சர்லாந்தின் இ.பி.எப்.எல்., ஆராய்ச்சி மையத்தின்விஞ்ஞானிகள்.

இதற்கென தற்போது, ‘காப்விட்’ (CoughVid) என்ற மொபைல் ஆப்பை அவர்கள் சோதனைக்காக உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து, இருமும் சத்தத்தை பதிவு செய்து அனுப்பினால், சில நிமிடங்களில் அது கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் இருமலா, இல்லையா என்பதை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தெரிவித்துவிடும்.
தற்போது சுவிட்சர்லாந்திலுள்ளோரிடம், தங்கள் செயலிக்கு இருமல் சத்தங்களை பதிவிட்டு அனுப்பும்படி விஞ்ஞானிகள் கோரிஉள்ளனர். பல்லாயிரம் மாதிரி சத்தங்கள் சேகரிக்கப்பட்டால், செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் கணிப்பு துல்லியம் கூடும் என்றும், பிறகு பரவலாக அது கிடைக்கும் வகையில் செய்யவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: