`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன?

ஐபேக் தரப்பில் இருந்தும் மாவட்டத்துக்கு ஒரு வடமாநில இளைஞரை நியமித்துள்ளனர். உதவி வேண்டுவோரிடம், ‘பொருள் வந்து சேர்ந்துவிட்டதா?’ என ஐபேக் தரப்பு கிராஸ் செக் செய்வதை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லையாம்

‘இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு மறுபடியும் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்’ என, ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார். அ.தி.மு.க தரப்பில் இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. இதுகுறித்து பேசிய அ.தி.மு.க-வினர், ”ஏற்கெனவே பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியதற்கு, அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் பதிலடி கொடுத்தனர். இதில் பா.ஜ.க தலைமைக்கும் எடப்பாடி தரப்புக்கும் உரசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் தற்போதைய ட்வீட்டுக்கு பதிலடி தர வேண்டும் என சில சீனியர்கள் துடித்ததற்கு, ‘வேண்டாம்… பொறுமையாக இருங்கள், பேசிக்கொள்ளலாம்’ என்று எடப்பாடி தரப்பில் கூறப்பட்டதாம்!

ஹேங்-அவுட் திரையில் தோன்றிய கழுகார், ”பிரஷாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனப் பஞ்சாயத்துதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முகாமை ஆக்கிரமித்திருக்கிறது” என்றபடி செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.

” ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு நிதி திரட்ட முடியவில்லை என தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம் அதிருப்தி நிலவுவதை, ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்படியான சூழலில் 25 நகரங்களில் நடைபெற்றுவரும் தி.மு.க-வின் உணவு அளிக்கும் திட்டத்தை 150 தொகுதிகளுக்கு விரிவுபடுத்த ஐபேக் முடிவெடுத்திருக்கிறதாம். ‘இவங்க பாட்டுக்கு டெய்லி ஒரு லிஸ்ட் அனுப்பிடுறாங்க… யார்கிட்ட இருக்குய்யா பணம்?’ என தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.”

”ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் செலவு செய்துதானே ஆகவேண்டும்?”

”அதற்காக சுயமரியாதையையும் அடகுவைக்க வேண்டுமா என்பதுதான் தி.மு.க-வுக்குள் எழுந்துள்ள போர்க்குரல். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை ஐபேக்குடன் ஒருங்கிணைக்க தி.மு.க-வின் அமைப்புரீதியான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை பணியமர்த்தும்படி தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஐபேக் தகவல் அனுப்பியுள்ளது.

ஐபேக் தரப்பில் இருந்தும் மாவட்டத்துக்கு ஒரு வடமாநில இளைஞரை நியமித்துள்ளனர். உதவி வேண்டுவோரிடம், ‘பொருள் வந்து சேர்ந்துவிட்டதா?’ என ஐபேக் தரப்பு கிராஸ் செக் செய்வதை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லையாம்.”

சமீபத்தில் தி.மு.க-வின் ஐ.டி விங்குக்கும் ஐபேக் டீமுக்கும் இடையேகூட பிரச்னை வெடித்ததே?”

”ஆமாம். டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்ததைக் கண்டித்து, மே 7-ம் தேதி ‘#குடியைக்கெடுக்கும் அதிமுக’ என்ற ஹேஷ்டேக்கில் ஐபேக் டீம் ட்ரெண்ட் செய்ய தொடங்கியது. இதற்காக வட மாநிலங்களிலுள்ள ஐபேக் ட்விட்டர் ஐ.டி-க்களும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தன. இந்த ஹேஷ்டேக்கில்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், ஐபேக்கிடம் ஏற்கெனவே முறைத்துக்கொண்டிருந்த தி.மு.க-வின் ஐ.டி விங், ‘#குடிகெடுக்கும்_எடப்பாடி’ என புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி, தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். ஐபேக் உருவாக்கிய ஹேஷ்டேக் படுத்துவிட்டது. இதை ஐபேக் டீம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐ.டி விங் ஒத்துழைப்பதில்லை என ஸ்டாலின் வரையில் புகார் வாசித்திருக்கிறார்கள்.”

%d bloggers like this: