கொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்? – ஓர் வழிகாட்டுதல்!
எல்லோருக்கும், எதிர்காலத்தில் கல்வி, திருமணம், வீடு கட்டுவது, கார் வாங்குவது எனப் பல தேவைகள் இருக்கும். இதற்கு வாங்கும் சம்பளத்திலிருந்தோ, தொழிலிலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்தோ ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சரியான நிதித் திட்டமிடல் அவசியம்.