கால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம்! மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.

பெண்களுடைய குணாதிசயங்கள் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருக்கக் கூடாது என்று பலவகையான சாஸ்திர குறிப்புகள், பலவகையான கோட்பாடுகளை

சொல்லியிருந்தாலும், ஒரு பெண்ணின் அங்கங்கள் இப்படி இருக்கும் பட்சத்தில், அந்தப் பெண்ணினுடைய சுபாவம் எப்படி இருக்கும்? என்று சாமுத்திரிகா லட்சணத்தை வைத்து சொல்லிவிடமுடியும். அதிலும், குறிப்பாக ஒரு பெண்ணின் பாதத்தை வைத்தும், கால் விரல்களை வைத்தும் அந்தப் பெண்ணுடைய குணாதிசயம் எப்படி இருக்கும்? அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆன பின்பு, அவளுடைய கணவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவிடமுடியும். ஒரு பெண்ணுடைய பாதத்தை வைத்தும், கால் விரல்களை வைத்தும், இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட முடியுமா? என்று சிந்திக்காதீர்கள்! பெண்ணின் பாதத்தில் அடங்கியிருக்கும் ரகசியத்தை சாமுத்திரிகா இலட்சனம் நமக்கு விரிவாகக் கூறியுள்ளது. அது என்ன என்பதை நீங்களும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணின் கால் விரல்களை ஐந்து உறுப்பினர்களாக சாமுத்திரிகா லட்சணம் பிரித்து வைத்துள்ளது. கட்டைவிரல் அங்குஸ்தா என்றும், அதற்கு அடுத்த விரல் டார்ஜனி என்றும், நடுவே இருக்கும் விரல் மத்தியமா என்றும், கடைசி விரலுக்கு முன்னே இருக்கும் வீரல் அனாமிகா என்றும், கடைசி விரல் கனிஷ்திகா என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒரு பெண்ணினுடைய கட்டை விரலுக்கு அடுத்த விரல், கட்டைவிரலை விட பெரியதாக இருந்தால் அந்தப் பெண் வீட்டிற்கு அடங்க மாட்டாள் என்று சாமுத்ரிகா லட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பல திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட விரல்களை கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை கணவனிடம் ஆலோசிக்காமல் தாங்களே முடிவினை எடுத்துக் கொள்ளும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பிரச்சினைகள் வரும் பட்சத்தில், இப்படிப்பட்ட பெண்களுடைய கணவர் விட்டுக் கொடுத்து சென்றால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

காலில் இருக்கும் விரல்கள் அனைத்துமே நீளமாக, பெரியதாக, மலை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும் பெண்கள், வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் குணம் கொண்டவளாக இருப்பாள். இப்படிப்பட்ட விரல்களை கொண்ட பெண்கள் தங்கள் கணவருடைய குடும்பத்தையும், எக்காரணத்தைக் கொண்டும், என்றைக்கும், எவரிடமும் விட்டுத்தர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்படிப்பட்ட விரல்களை கொண்ட பெண்ணின் எதிர்காலம் சுபீட்சமாக தான் இருக்கும்.

பெண்களுடைய கால் பாதத்தில் இருக்கும் சுண்டு விரலும், அதற்க்கு முன்னே இருக்கும் விரலும், தரையில் படாமல் இருந்தால், இவர்கள், எவரையும் நம்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனது கணவரது செயல்பாடுகளில், எந்த ஒரு நம்பிக்கையும் வைக்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட பெண்கள் தங்களுடைய வாழ்க்கையின் கடைசிவரை பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

பெண்களின் கால்களில் இருக்கும் சுண்டு விரலும், அதற்க்கு முன்னே இருக்கும் விரலும் ஒரு சரி சமமாக இருந்தால், கணவரின் வாழ்க்கையில் பண நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்றும், தொழிலில் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கால் விரல்களின் இடையே அதிகப்படியான இடைவெளியை கொண்ட பெண்கள், தாராளமாக செலவு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதேபோல், ஒரு பெண்ணுடைய கால் பாதத்தில், சக்ரா, ஸ்வஸ்திகா, துவாஜ என்று சொல்லப்படும் இந்தக் குறியீடுகள், ரேகையில் இருந்தால் அந்தப் பெண் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் வாழ்க்கையில் ராஜயோகத்தை பெற்றவர்களாகவும், இவர்களை மணம் முடிக்கும் கணவரும், மிக அதிஷ்டசாலியானவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுடைய கால் பாதம் வட்ட வடிவில் இருந்தாலும், அந்தப் பெண் மிகவும் அதிர்ஷ்டசாலியாக சொல்லப்பட்டுள்ளார்.

சாமுத்திரிகா லட்சணம் பெண்களின் கால் விரல்களை வைத்து, இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் சொன்னாலும், இவை எல்லாவற்றையும் தாண்டி, சில பெண்கள், இந்த விரல் கோட்பாட்டையும் தாண்டி, விதிவிலக்காக, பெண்களுக்கு உண்டான சில உயரிய குணங்களை கொண்டு, தங்களுடைய குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு, அனுசரித்து, பொறுமையோடு செல்லும் குணம் கொண்ட பெண்களாக, இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற கருத்தை முன் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்

%d bloggers like this: