`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா?’- நிபுணர்களின் ஆலோசனைகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதையடுத்து, உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்பவர்களும் முகக்கவசம் அணிந்தே பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களுக்குக் கூடுதலான ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கணிசமான அளவில் உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர்.இந்த நிலையில், உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியின்போது முகக் கவசம் அணிவதைப் பற்றி விளையாட்டு மருத்துவர் சத்தியா விக்னேஷை தொடர்புகொண்டு பேசினோம்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தக் கொரோனா நேரத்தில் வசதி வாய்ப்புகள் இருந்தால் வீட்டிலிருக்கும் இடத்திலேயே உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதையும் மீறி கட்டாயமாக வெளியிடங்களில் பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டால் நல்லது. முகக்கவசங்களிலேயே 3 ஃப்ளை (3 Ply) ஃபேஸ் மாஸ்க், சிங்கிள் க்ளாத் ஃபேஸ் மாஸ்க், என் 95 மாஸ்க் என பல வகைகள் உள்ளன.

இந்த ஒவ்வொரு முகக்கவசத்திலும் உள்ளே வரும் காற்றின் அளவு வேறுபடும். புதிதாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபடப்போகிறவர்கள், அதிக அளவிலான காற்றை உள்ளே அனுமதிக்கும் வகையிலான முகக்கவசத்தை அணிய வேண்டும். என் 95 போன்ற முககவசத்தை அணிந்து கட்டாயம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. மேலும் ஆஸ்துமா, நுரையீரல் கோளாறு மற்றும் இதயக் கோளாறு உடையவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபடக் கூடாது.

தொற்றுநோய் மருத்துவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது நமக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். இதனால் முகக்கவசம் அணியும்போது சிரமம் ஏற்படலாம்.
கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? – பாலியல் மருத்துவரின் விளக்கம்

இதற்கு முன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குப் பிறகு ஓட்டப்பயிற்சியைத் தொடரும்போது மெதுவாகத்தான் ஆரம்பிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து ஓடும்போது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது உயரமான மலைப்பகுதிகளில் ஓடுவது போன்றது. ஓட்டப்பயிற்சியின்போது நமது வேகத்தைக் குறைத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஓடும்போது மூச்சுத்திணறலோ அல்லது நெஞ்சுவலியோ ஏற்பட்டால் ஓடுவதை நிறுத்த வேண்டும்.

பயிற்சியில் ஈடுபடுபவர்கள் துணியால் செய்யப்பட்ட மாஸ்க் அணிந்துகொள்ளலாம். இது காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம்விட முகக்கவசம் இல்லாமல் ஓடுவதே சிறந்தது. இந்த நேரத்தில் அதைச் செய்ய முடியாது என்பதால் பாதுகாப்பு முறையை நமது வசதிக்கேற்றவாறு பின்பற்ற வேண்டும். ஓடும்போது ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் பத்து அடி இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.
கூட்டமாக ஓட்டப்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. ஓட்டப்பயிற்சியின்போது ஒருவர் மற்றொருவரை முந்தும்போது அவருக்கு எதிர்திசையில் நமது தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டும். இதனால் நமது மூச்சுக்காற்று அவர் மீது படுவதைத் தவிர்க்க முடியும். கூட்டமான இடத்தில் ஓடுதல் நல்லதல்ல. பொதுவெளியில் முடிந்தளவு யாருமில்லாத பகுதியில் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளலாம். முகக்கவசம் அணியாமல் ஓடுவது சிறந்ததுதான். ஆனால், இப்போதைய சூழலில் நமது பாதுகாப்பையும், அடுத்தவருடைய பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம். “பொதுவாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது நமக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும். இதனால் முகக்கவசம் அணியும்போது சிரமம் ஏற்படலாம். எனவேதான் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது முகக்கவசம் வேண்டாம் என்று கூறப்படுகிறது. அதிகம் கூட்டம் இல்லாத இடங்களில் உடற்பயிற்சி செய்யும்போது முகக்கவசம் அணியாமல் இருக்கலாம். ஆனால், அப்போதும் கட்டாயம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்னும் நம்மூரில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட பிறகு மக்கள் அங்கே உடற்பயிற்சி செய்யும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஓட்டப்பயிற்சியின்போது முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஓடும்போது வியர்வை ஏற்பட்டால் அதைத் துடைக்க தனியாக ஒரு துணியைப் பயன்படுத்த வேண்டும். நடைப்பயிற்சியின்போது முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். பொதுவெளியில் எந்தவிதமான பயிற்சியை மேற்கொண்டாலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம்” என்றார்.

%d bloggers like this: