`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்?
உலகத்தின் மொத்த பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை ஆக்கிரமித்து லோகஸ்ட்டால் அழிவை ஏற்படுத்த முடியும் என்று கூறுகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபுறம்… இன்னொருபுறம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது. இப்படியான பிரச்னைகளுக்கு நடுவில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை என்ன? அவை அழிவை ஏற்படுத்தக் காரணம் என்ன?