கண்களுடைய அழகே குறையுதா? கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க

கருவளையங்கள் இருந்தால் கண்களின் தோற்றம் அத்தனை அழகாகக் காட்சியளிக்காது. எனவே எப்படி அவற்றை பாதாம் எண்ணெய் பயன்படுத்தி

<!–more–>

அகற்றுவது என்று பார்க்கலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் : இரண்டையும் அரை ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு கலந்துகொள்ளுங்கள். தூங்கும் முன் கருவளையங்களில் தடவி மசாஜ் செய்துவிட்டு தூங்கிவிடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் மறையும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் : ரோஸ் வாட்டரில் பஞ்சு நனைத்து கருவளையங்களில் தடவுங்கள். அது காய்ந்ததும் பாதாம் எண்ணெய் தடவி 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். இரவு தூங்கும் முன் இதை செய்து காலையில் பாருங்கள் பலன் தெரியலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் : இரண்டையும் அரை ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளுங்கள். கண்களுக்குக் கீழ் 2 நிமிடங்கள் மசாஜ் செய்து இரவு தூங்கிவிடுங்கள்.

%d bloggers like this: