பார்லர் சென்று பணத்தை செலவழிப்பதை விட வீட்டில் இருக்கும் அழகுக் குறிப்புகளை வைத்தே பணத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த வகையில் முகத்தை பிளீச்சிங் செய்து பளிச்சென ஜொலிக்கச் செய்யும் மேஜிக்கை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். எவ்வாறு என்று பார்க்கலாம்.
தக்காளி : தக்காளி சாறு பிழிந்து அதில் ஓட்ஸ் மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
பூசணிக்காய் : பூசணிக்காயின் சதையை கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு 2 ஸ்பூன் தேன் மற்றும் பால் கலந்து நன்கு குழைத்துக்கொண்டு முகத்தில் தடவுங்கள். முற்றிலும் காய்ந்து உதிரும்போது கழுவிவிடுங்கள்.
சிட்ரஸ் பழம் : எலுமிச்சை சாறு, திராட்சை , பால் மற்றும் சர்க்கரை மூன்றையும் நன்குக் கலந்து மசித்துக்கொள்ளுங்கள். பேஸ்ட் போல் ஆனதும் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் ஜொலிக்கும்.
பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து 5 – 10 நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்ய முகம் இறந்த செல்கள் அகன்று தெளிவாக இருக்கும்.
ஓட்ஸ் : 2 ஸ்பூன் ஓட்ஸுடன் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கழுவும் போது வட்டப்பாதையில் மசாஜ் போல் தேய்த்து கழுவுங்கள்.