பஞ்சாங்குலி’ என்னும் ரேகை சாஸ்திரத்தின் முக்கியமான பகுதி உள்ளங்கையில் உள்ள மேடுகள். சதைப்பற்று மிக்க பகுதிகளே மேடுகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மேடும் நமது வாழ்வின் ஒரு சில அம்சங்களைக் கட்டுப்படுத்தும் கேந்திரம். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஓர் அடையாளக் குறி உண்டு. எந்தெந்த மேட்டில் எந்தெந்த கிரகங்களின் அடையாளக் குறிகள் அமைந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்கள் ஏற்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில், எந்த ராசி வீட்டில் எந்த கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச – நீச நிலை இருக்கிறது என்பதைவைத்து, ஜாதகப் பலன்கள் கணக்கிடப் படுகின்றன. அதுபோல, எந்த மேட்டில் எந்த கிரகத்தின் குறி இருக்கிறது என்பதை வைத்து, பலன் அறிய முடியும்.
இங்கே கிரக மேடுகள் கிரகச் சின்னங்கள் மற்றும் இதரச் சின்னங்களை விளக்கும் படங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு, குறிப்பிட்ட கிரகச் சின்னங்கள் எந்த மேடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை விளக்கும் அட்டவணை அடுத்த பக்கங்களில் உள்ளது.