முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்… உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்…

கழகங்களில் தொடரும் முட்டல் மோதல்!

“டேட்டாவை ஆன் செய்யும்…” கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. நாம் ஆன் செய்ததும், கூகுள் ஹேங்அவுட்ஸில் காட்சியளித்தார் கழுகார்.

“அ.தி.மு.க-வில் பதவிப் பஞ்சாயத்து களைகட்டுகிறதே?” கேள்வியுடன் அவரை எதிர்கொண்டோம். “ஆமாம். அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வருடன் முட்டிக் கொள்ளும் அளவுக்கு விவகாரம் சென்றுவிட்டது” என்று கடலையைக் கொறித்தபடி செய்திகளுக்குள் தாவினார்.

“மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் வீதம் அமைப்புரீதியாக மாவட்ட நிர்வாகங்களைப் பிரிக்க அ.தி.மு.க தயாராகிறது. புதிய மாவட்டச் செயலாளர் பதவிக்கான போட்டி இப்போதே களைகட்டுகிறது. `வேலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக யாரை அமர்த்தலாம்…’ என உள்ளூர் அமைச்சர் வீரமணியிடம் தலைமை கருத்து கேட்டிருந்ததாம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்புவை பரிந்துரைக்கும் முடிவுக்கு அமைச்சர் வந்துவிட்டார் என்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, பதவியைத் தட்டிப்பறிக்க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார் இருவரும் பலமாக முயல்கி றார்களாம். புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மூலம் ஜனனி சிபாரிசு கேட்டுள்ளாராம். ஆனால், ‘உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது’ என்று அவர் ஒதுங்கிவிட்டாராம். புதிய மா.செ-வுக்கான ரேஸ் வேலூர் அ.தி.மு.க-வில் சூடு கிளப்புகிறது.”

“பலே…”

“புதிதாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்சியின் அமைப்புரீதியாக இப்போது காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு என இரு மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் தொகுதிகளை மறுவரையறை செய்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவை நியமிக்கக் கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாம். இதற்கு தற்போதைய மாவட்டச் செயலாளரான சிட்லபாக்கம் ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.”

“ம்ம்…”

“விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றைத் தன் ஆதரவாளரான லட்சுமணனுக்கு அளிக்க ஓ.பி.எஸ் அழுத்தம் கொடுக்கிறாராம். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கவே கூடாது. அப்படிப் பிரித்தாலும், லட்சுமணனுக்குப் பதவி கொடுக்கக் கூடாது’ என்று முரண்டுபிடிக்கிறாராம். இந்தக் கோபத்தில் அமைச்சரவைக் கூட்டத்துக்கே அவர் வரவில்லை. சமாதானப்படுத்துவதற்காக முதல்வர் தரப்பிலிருந்து பேசியபோது, ‘எனக்கு உடம்பு சரியில்லைங்க. அதான் வரலை’ என்று படக்கென சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டாராம். என்ன செய்வது என்று தெரியாமல் முதல்வர் தரப்பு கையைப் பிசைகிறது.”

“தி.மு.க-விலும் மாவட்டச் செயலாளர் பதவி ஒன்றைப் பூர்த்தி செய்வதில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றனவே..?”

“சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த மறைந்த ஜெ.அன்பழகனின் பதவியை நிரப்பும் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள். உண்மைதான். அந்தப் பதவிக்கு தற்போது தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் கு.க.செல்வத்தை நியமிக்கலாமா என்று யோசிக்கிறதாம் கட்சித் தலைமை. இவர் ஏற்கெனவே ஒன்றிணைந்த தென் சென்னை மாவட்டச் செயலாளராக சைதை கிட்டு இருந்தபோது அவருக்குக் கீழ் துணைச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் செல்வம் இருந்தபோது ஜேப்பியார் கீழே ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்தவர். இந்த அனுபவங்களை மனதில்கொண்டு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவரைப் பரிசீலிக்கிறதாம் கட்சித் தலைமை.”

“அன்பழகன் குடும்பத்திலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தனவே?”

“அன்பழகனின் தம்பி `குட்டி’ என்கிற கருணாநிதி தரப்பில் பதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், கட்சித் தலைமைக்கு விருப்பம் இல்லையாம். ஒருவேளை கு.க.செல்வத்துக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டால், அன்பழகனின் மகன் ராஜாவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

“உதயநிதி ட்விட் ஒன்றை பதிவிட்டிருப்பதைத் தொடர்ந்து ஆ.ராசா ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் போலிருக்கிறது?”

“எனக்கும் அப்படித்தான் தகவல் வந்தது. ‘அரியலூர் இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்கின் சகோதரர் வினோத் ஸ்காட்லாந்தில் பணிபுரிந்தநிலையில் மே 23-ம் தேதி அங்கு அகால மரணமடைந்தார். `கொரோனா நெருக்கடியில் அவரின் உடலைத் தமிழகம் கொண்டு வர உதவிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மாவட்டச் செயலாளர் சிவசங்கர் இருவருக்கும் நன்றி’ என்று ட்விட்டைத் தட்டியிருந்தார் உதயநிதி. ‘அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவை ஓவர்டேக் செய்து தமிழச்சியிடம் உதவி பெற்றதுடன், அவருக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் உதயநிதி. இது எந்த வகையில் நியாயம்?’ என்று பொங்குகிறார்கள் ராசாவின் ஆதரவாளர்கள். தமிழச்சி மற்றும் சிவசங்கர் தரப்பிலோ, ‘நல்லது யார் செய்தால் என்ன, கட்சிக்காரனின் சகோதரர் மரணத்திலுமா உள்கட்சி அரசியல் செய்வது?’ என்று புலம்புகிறார்கள்

இதழ்கள்
கொரோன அப்டேட்ஸ்
செய்திகள்
விகடன் ஸ்பெஷல்
சினிமா
ஆன்மிகம்
விளையாட்டு
லைஃப் ஸ்டைல்
`அறியாமையைவிட ஆபத்தானது ஆணவம்!’ – மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி #corona
`கத்திரிக்காய் விற்கலன்னா எதுக்கு கவலைப்படணும்?!’ -ஊரடங்கில் அசத்திய காரைக்கால் இளம் விவசாயி
`காற்றில் பறந்த ஊரடங்கு…மீன்பிடித் திருவிழாவுக்காகக் கூடிய நூற்றுக்கணக்கானோர்!’ அரியலூர் அதிர்ச்சி
`ஒரு நிறுவனத்தில் மட்டுமே ஆண்டுக்கு ரூ.50 கோடி மிச்சப்படுத்தலாம்!’-அரசுக்கு ஜெய்ஆனந்த் சொல்லும் யோசனை
`ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், கலைஞர்கள்!’ -உதவிய வேலூர் ரஜினி மக்கள் மன்றம்

Published:Today at 6 AMUpdated:Today at 6 AM
மிஸ்டர் கழுகு: முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்… உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்…
கழுகார்
மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
கழகங்களில் தொடரும் முட்டல் மோதல்!

“டேட்டாவை ஆன் செய்யும்…” கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. நாம் ஆன் செய்ததும், கூகுள் ஹேங்அவுட்ஸில் காட்சியளித்தார் கழுகார்.

“அ.தி.மு.க-வில் பதவிப் பஞ்சாயத்து களைகட்டுகிறதே?” கேள்வியுடன் அவரை எதிர்கொண்டோம். “ஆமாம். அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வருடன் முட்டிக் கொள்ளும் அளவுக்கு விவகாரம் சென்றுவிட்டது” என்று கடலையைக் கொறித்தபடி செய்திகளுக்குள் தாவினார்.

“மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் வீதம் அமைப்புரீதியாக மாவட்ட நிர்வாகங்களைப் பிரிக்க அ.தி.மு.க தயாராகிறது. புதிய மாவட்டச் செயலாளர் பதவிக்கான போட்டி இப்போதே களைகட்டுகிறது. `வேலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக யாரை அமர்த்தலாம்…’ என உள்ளூர் அமைச்சர் வீரமணியிடம் தலைமை கருத்து கேட்டிருந்ததாம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்புவை பரிந்துரைக்கும் முடிவுக்கு அமைச்சர் வந்துவிட்டார் என்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, பதவியைத் தட்டிப்பறிக்க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார் இருவரும் பலமாக முயல்கி றார்களாம். புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மூலம் ஜனனி சிபாரிசு கேட்டுள்ளாராம். ஆனால், ‘உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது’ என்று அவர் ஒதுங்கிவிட்டாராம். புதிய மா.செ-வுக்கான ரேஸ் வேலூர் அ.தி.மு.க-வில் சூடு கிளப்புகிறது.”

எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி – சி.வி.சண்முகம்
“பலே…”

“புதிதாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்சியின் அமைப்புரீதியாக இப்போது காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு என இரு மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் தொகுதிகளை மறுவரையறை செய்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையாவை நியமிக்கக் கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாம். இதற்கு தற்போதைய மாவட்டச் செயலாளரான சிட்லபாக்கம் ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.”

“ம்ம்…”

“விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றைத் தன் ஆதரவாளரான லட்சுமணனுக்கு அளிக்க ஓ.பி.எஸ் அழுத்தம் கொடுக்கிறாராம். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கவே கூடாது. அப்படிப் பிரித்தாலும், லட்சுமணனுக்குப் பதவி கொடுக்கக் கூடாது’ என்று முரண்டுபிடிக்கிறாராம். இந்தக் கோபத்தில் அமைச்சரவைக் கூட்டத்துக்கே அவர் வரவில்லை. சமாதானப்படுத்துவதற்காக முதல்வர் தரப்பிலிருந்து பேசியபோது, ‘எனக்கு உடம்பு சரியில்லைங்க. அதான் வரலை’ என்று படக்கென சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டாராம். என்ன செய்வது என்று தெரியாமல் முதல்வர் தரப்பு கையைப் பிசைகிறது.”

“தி.மு.க-விலும் மாவட்டச் செயலாளர் பதவி ஒன்றைப் பூர்த்தி செய்வதில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றனவே..?”

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
“சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த மறைந்த ஜெ.அன்பழகனின் பதவியை நிரப்பும் விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள். உண்மைதான். அந்தப் பதவிக்கு தற்போது தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் கு.க.செல்வத்தை நியமிக்கலாமா என்று யோசிக்கிறதாம் கட்சித் தலைமை. இவர் ஏற்கெனவே ஒன்றிணைந்த தென் சென்னை மாவட்டச் செயலாளராக சைதை கிட்டு இருந்தபோது அவருக்குக் கீழ் துணைச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் செல்வம் இருந்தபோது ஜேப்பியார் கீழே ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்தவர். இந்த அனுபவங்களை மனதில்கொண்டு மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவரைப் பரிசீலிக்கிறதாம் கட்சித் தலைமை.”

“அன்பழகன் குடும்பத்திலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தனவே?”

“அன்பழகனின் தம்பி `குட்டி’ என்கிற கருணாநிதி தரப்பில் பதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், கட்சித் தலைமைக்கு விருப்பம் இல்லையாம். ஒருவேளை கு.க.செல்வத்துக்கு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டால், அன்பழகனின் மகன் ராஜாவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.”

“உதயநிதி ட்விட் ஒன்றை பதிவிட்டிருப்பதைத் தொடர்ந்து ஆ.ராசா ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் போலிருக்கிறது?”

“எனக்கும் அப்படித்தான் தகவல் வந்தது. ‘அரியலூர் இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக்கின் சகோதரர் வினோத் ஸ்காட்லாந்தில் பணிபுரிந்தநிலையில் மே 23-ம் தேதி அங்கு அகால மரணமடைந்தார். `கொரோனா நெருக்கடியில் அவரின் உடலைத் தமிழகம் கொண்டு வர உதவிய தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மாவட்டச் செயலாளர் சிவசங்கர் இருவருக்கும் நன்றி’ என்று ட்விட்டைத் தட்டியிருந்தார் உதயநிதி. ‘அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவை ஓவர்டேக் செய்து தமிழச்சியிடம் உதவி பெற்றதுடன், அவருக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் உதயநிதி. இது எந்த வகையில் நியாயம்?’ என்று பொங்குகிறார்கள் ராசாவின் ஆதரவாளர்கள். தமிழச்சி மற்றும் சிவசங்கர் தரப்பிலோ, ‘நல்லது யார் செய்தால் என்ன, கட்சிக்காரனின் சகோதரர் மரணத்திலுமா உள்கட்சி அரசியல் செய்வது?’ என்று புலம்புகிறார்கள்.”

“ஓஹோ!”

“தி.மு.க குடும்பத்தின் கஜானாவாக இருக்கும் வட மாவட்டப் பிரமுகர் ஒருவர் தனது மருத்துவக் கல்லூரிக்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இப்போது ஆட்சி மேலிடத்திடமே பேசி கமுக்கமாக அனுமதி வாங்கிவிட்டாராம். ‘கொரோனா ஊழல் என நாம் ஒருபக்கம் அரசைக் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க… இவர் நமக்கே தெரியாமல் டீல் போட்டு அனுமதி வாங்கிவிட்டாரே…’ என கஜானா பிரமுகர்மீது தி.மு.க தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்” என்றபடி, டீயை உறிஞ்சினார் கழுகார்.

ஸ்டாலின் – உதயநிதி
ஸ்டாலின் – உதயநிதி
“அடேங்கப்பா!”

“தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்மீதும் உள்ள ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் திரட்டும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககத்துக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும் சொல்லியுள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், இந்தப் புகார்களையெல்லாம் கையிலெடுத்து அமைச்சர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளார்கள்.”

“காவல்துறையில் புலம்பல்கள் அதிகரித்துள்ளனவே?”

“ஆமாம். மாம்பலம் காவல் ஆய்வாளர் மரணத்துக்குப் பிறகு காவல்துறையினர் பலரும் பீதியில் இருக்கிறார்களாம். குறிப்பாக, செக்யூரிட்டி பிராஞ்ச்சில் கீழ்நிலைப் பதவிகளில் இருக்கும் பலரும் அச்சத்தில் புலம்புகிறார்கள். ‘ஐம்பது வயதைத் தாண்டிய எங்களை 18 மணி நேரம் டூட்டியில் போடுவது என்ன நியாயம்?’ என்று குமுறுகிறார்கள். அதேசமயம், ‘பாதுகாப்புத்துறையில் அமைச்சர்களுக்கு

பி.எஸ்.ஓ-க்களாக இருக்கும் பலரும் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் தொடர்கிறார்கள். அமைச்சர்கள் பெயரைச் சொல்லி, கீழேயிருக்கும் பணியாளர்களை வதைக்கிறார்கள். குறிப்பாக, பத்து ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள் ஒரே இடத்தில் இருந்துகொண்டு எங்களுக்கு வழிவிட மறுக்கிறார்கள்’ என்றெல்லாம் குமுறல் எழுந்துள்ளது!”

“பாவம்தான்!”

“திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவிலுள்ள கோலூர் ஏரியிலும், கும்மிடிப்பூண்டி தாலுகாவிலுள்ள அயநல்லூர் ஏரியிலும் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். திருட்டுத்தனமாக ஒரு நாளைக்குக் குறைந்தது நூறு லோடு மணல் அள்ளப்படுகிறதாம். வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறை என எல்லோருக்கும் ‘கட்டிங்’ சென்றுவிடுவதால் யாரும் கண்டுகொள்வதில்லை. மிகப்பெரிய போராட்டத்துக்கு அப்பகுதி மக்கள் தயாராகிறார்கள்” என்ற கழுகார், “ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 18 லட்சம் ரூபாய் செலவில், தனது பயன்பாட்டுக்காகப் புதிய அறை ஒன்றை சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியில் இருந்தபோது பீலா ராஜேஷ் தயார் செய்தாராம். ‘கொரோனா நேரத்தில் இது தேவையற்ற செலவு’ என அப்போதே துறையில் உள்ள சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது, அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில், 18 லட்ச ரூபாய் விவகாரத்தை எதிர்தரப்பு பெரிதாக்க முனைகிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: