கொரோனா விளைவு: `ரிவர்ஸ் மைக்ரேஷன்’, பெரிய நகரங்களின் மவுசு குறையும்..!

கொரோனாவுக்குப் பிறகு, `வாழ்க்கை என்றால் என்ன…’ என்று பலரை சிந்திக்க வைத்துள்ளது. பலர் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பெரிய நகரங்களிலிருந்து செல்வதை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம்

* பெரிய நகரங்களின் மவுசு குறையும்:

பெரிய நகரங்களின் மவுசு பலதரப்பட்ட மக்களிடமும் ஏற்கெனவே குறைந்துவிட்டது. சமீபத்தில் வந்த ஒரு வாட்ஸ்அப் செய்தி இது – “ஒரு காலத்தில், ‘சென்னைக்குப் போ… எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம்’ என்பார்கள். ஆனால் இப்போது, ‘சென்னையை விட்டுப் போ, எப்படியும் பிழைத்துக் கொள்வாய்’ என்கிறார்கள்.”

பெரிய நகரங்களில் நல்ல வருவாய் இருந்தாலும், விலைவாசி ஏற்றம், நெருக்கடி, குடும்பத்தினருடன் தரமாக நேரத்தைச் செலவு செய்ய நேரம் இல்லாதிருப்பது, சிறிய வீடுகள் எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன.

இந்த கொரோனாவுக்குப் பிறகு, `வாழ்க்கை என்றால் என்ன…’ என்று பலரை சிந்திக்க வைத்துள்ளது. ஆகவே, பெரிய நகரங்களின் மவுசு மக்களிடையே குறைய ஆரம்பித்திருக்கிறது.

இது ஒரு நல்ல மாற்றம்தான். இதை ஊக்குவிக்க நமது அரசாங்கங்கள் முனைப்பாகச் செயல்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழிற்சாலைகளையும், ஐ.டி நிறுவனங்களையும் பெரிய அளவில் உருவாக்க வேண்டும்.

அரசாங்கம் முனைப்பாகச் செயல்படவில்லையென்றால், சில ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் பெரிய நகரங்களை நோக்கிப் பலரும் பயணிக்கும் அவல நிலைதான் ஏற்படும்.

* சிறு நகரங்களுக்கு மக்கள் குடியேற்றம்:

இந்தப் பிரச்னையின்போது, பலர் தங்கள் சொந்தக் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பெரிய நகரங்களிலிருந்து செல்வதை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.

பெரு நகரங்களில் சமீபகாலங்களில் குடியேறி, தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றவர்கள் திரும்பவும் பெரு நகரங்களுக்கு வர வேண்டுமா என்று யோசிக்கிறார்கள்.

”50% குறைவான வருமானம் கிடைத்தாலும் பரவாயில்லை, நான் சொந்த ஊரிலேயே இருந்துவிடுகிறேன்” என யோசிப்பவர்களும் உண்டு.

ஆகவே, இனிவரும் காலங்களில் ‘ரிவர்ஸ் மைக்ரேஷன்’ (Reverse Migration) நடக்க வாய்ப்புள்ளது. கொரோனா போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் வந்தால் என்ன செய்வது என்பது பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

ஏற்கெனவே பலரும் ஓய்வுக்காலத்தை சொந்த ஊரில்தான் கழிக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். கொரோனா அவர்களது ஆசையைத் துரிதப்படுத்தியுள்ளது. இந்த டிரெண்டால், கிராமங்களிலும் 2-ம்/ 3-ம்/ 4-ம் கட்ட நகரங்களிலும் வீடு கட்டுவது அதிகரிக்கும்.

* கமர்ஷியல் ரியல் எஸ்டேட் அடி:

வீட்டிலிருந்தே வேலை செய்யப் பலரும் ஆரம்பிக்கும்போது அலுவலகங்கள் நடத்த, குறைவான அளவிலேயே இடம் தேவைப்படும். பல நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களைச் சிறியதாக்கும். இதன் எதிரொலி, கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டில் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. தேவை என்பது ஏற்கெனவே வெகுவாகக் குறைந்துவிட்டது.

பெரிய நிறுவனங்கள் பல, `அடுத்த ஒரு வருடத்துக்கு வீட்டிலிருந்தே வேலை’ என்பதை அறிவித்துவிட்டன. இந்தப் பழக்கம் இத்துடன் நிற்கப்போவதில்லை. டி.சி.எஸ் உட்பட பல நிறுவனங்களும் `வீட்டிலிருந்து வேலை’ என்பதைத் தங்கள் கார்ப்பரேட் பாலிசியில் கொண்டுவருகின்றன.

ஆகவே, இனிவரும் நாள்களில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட்டுக்கு கஷ்ட காலம்தான். புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஜாலிதான்!

– இந்த மூன்று மாற்றங்கள் மட்டுமல்ல…

உலக அளவில் குறிப்பிடத்தகுந்த மரணங்களை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா, எல்லோருக்குமே மனதளவில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பெரிய அளவில் மாற ஆரம்பித்துள்ளது. `வாழ்க்கை என்றால் என்ன?’ என்று பலரைச் சிந்திக்கவைத்துள்ளது. பணம், பதவி என ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: