சாய்கிறாரா சரத்.. ச.ம.க.வை மொத்தமாக மூடிவிட்டு.. தாமரையில் மலர போகிறாரா.. பரபரக்கும் தகவல்!

ஒரு முக்கியமான தகவல் ஒன்று தமிழக அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அது சமக தலைவர் கட்சியை மொத்தமாகவே கலைத்துவிட்டு பாஜகவில் சேர போவதாக சொல்லப்பட்டு வருகிறது.

பாஜக எப்போ, எந்த அஸ்திரத்தை கையில் எடுக்க போகிறது என்றே யூகிக்க முடியாது.. ஆனால் எதையாவது அதிரடியாக செய்து விடுகிறது.. அப்படியே அதிரடிகளை சுழட்டினாலும், இன்னும் தாமரை மலராமலேயே உள்ளது.

இப்போதும் ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.. அதை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது வீசியும் உள்ளதாக தெரிகிறது.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. லாக்அப் டெத் கிடையாது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து!

பாஜக
கவுண்டர் ஓட்டுக்கள்
பாஜகவுக்கு எப்படி, கவுண்டர் சமுதாய ஓட்டுக்களை ஓரளவு தக்க வைத்து கொண்டுள்ளதோ, அதேபோல நாடார்களின் வாக்குகளையும் பெற்றுள்ளது.. அதேசமயம், இந்த ஓட்டுக்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தவும், பெருக்கவும் திட்டமிட்டுள்ளது. அதனால்தான் சசிகலா புஷ்பாவிடம், கொங்கு மண்டலத்தில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஓட்டுக்களை அள்ள ஏற்கனவே ஒரு அசைன்மென்ட் தரப்பட்டதாக செய்திகளும் வந்தன.

சரத்குமார்
விமர்சனம்
இந்நிலையில், சரத்குமாரையும் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. அதற்கேற்றபடி, சில வருஷமாகவே பாஜகவை சரத்குமார் விமர்சிக்காமலேயே உள்ளார். விமர்சிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இவர் மோடிக்கு ஆதரவு அளிக்கும் வகையிலேயே பேசி வருவதுதான்முதல் சந்தேகமாக எழுந்து வந்தது.

உதாரணம்திருடர்கள்
இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், சௌகிதார் என்பதற்கு ‘பாதுகாவலர்கள் அல்ல திருடர்கள்’ என்று ராகுல்காந்தி அன்று இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி விமர்சித்திருந்தார்.. அப்போது சரத்குமார் ‘மோடி கள்வர்தான், மக்களின் மனம் கவர்ந்த கள்வர்’ என்றார்.. அப்போதிருந்தே ஒரு இணக்கம் இருந்திருக்கவே கூடும்.

அரசியல்
காரணம், சரத்குமாருக்கென்று ஒரு வாக்கு சதவீதம் உள்ளது.. தேர்தலில் இவர் நிற்கும்போதெல்லாம் இவரது சமூகம் இவரை கைவிடுவதில்லை.. மேலும் அரசியல் அறிவு உள்ளவர்.. தொடர்ச்சியாக பல அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்… இது எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் நெருக்கம் உள்ளவர்.. அதனால் பாஜகவில் இணைவது என்பது நிறைய சாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

சமத்துவ மக்கள் கட்சி
இன்னும் இதற்கான எந்த அறிவிப்பும் முறைப்படி வரவில்லை என்றாலும், சரத்குமார் பாஜகவில் இணைவதை, அக்கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள் எப்படி எதிர்கொள்வார்கள்? அவர்களுக்கு விருப்பமா? அல்லது யாராவது முட்டுக்கட்டை போடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.. ஆனால், இதே சரத்குமார்தான் கடந்த காலங்களில் ‘தமிழகத்தில் அரசியல் நடத்தவே தமிழக பாஜக தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்’ என்றார்.. ‘பாஜக-வில் இழுப்பதற்காகவே ரஜினிக்கு விருது தரப்பட்டது’ என்றார்.. இவ்வளவும் பேசிய சரத்குமார் ஒருவேளை, அந்த கட்சியில் இணைகிறார் என்றால் அது வரவேற்கப்பட ஒன்றுதான்.

%d bloggers like this: