ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்?
02.08.2020 -ஆடிப்பெருக்கு
காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்… தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.
திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.
ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.
விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.
அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு.
சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள்.
அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.
காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?
குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு
கொரோனாவும் கடந்து போகும்!
கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. நோய் உண்டாக்கும் பயம், பொருளாதார நெருக்கடி, செய்திகளின் தொடர்
கொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?!
உலகத்தின் சுமுகமான இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி. கொரோனா என்ற வார்த்தையை அனுதினமும் பீதியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரணமாக செய்து வந்த விஷயத்தை இப்போது செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல;
வேகமெடுக்கும் உதயநிதி! – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்
விஷ்ஷ்ஷ்க்க்…” என்ற சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆர்ப்பாட்டமில்லாமல் என்ட்ரி கொடுத்தார் கழுகார்.
நமது கையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் அறிக்கை இருப்பதைப் பார்த்தவர், “தமிழ், தமிழர் என பா.ஜ.க உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் கவனித்தீரா!” என்றபடி செய்திக்குள் நுழைந்தார். சூடான ஃபில்டர் காபியை அவரிடம் நீட்டிவிட்டு அமைதி காத்தோம்.
ஆடியில் அம்மன் வழிபாடு’ – வேப்பிலை, கூழ், துள்ளுமாவு படைப்பதேன்?
ஆடி மாதம் வந்துவிட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில்கூட வேப்பிலைத் தோரணங்கள், கூழ் வார்த்தல், துள்ளுமாவு படைத்தல் என்பது விமர்சையாக நடக்கும். இதற்குக் காரணமாக புராணத்தில் சொல்லப்படும் கதை ஒன்றுண்டு.
அம்மன்
ஜமதக்னி என்ற முனிவரும் அவர் மனைவியான ரேணுகாதேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாசு, பரசுராமன் என நால்வர் மகன்களாகப் பிறந்தார்கள்.
அதன்பின் ஒருமுறை, கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது, இந்திரன் வருண பகவானைக் கொண்டு மழை பொழியச் செய்தான்.
வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், `பசிக்கிறது’ என உணவு கேட்டாள். அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, “அம்மா, எங்களிடம் இருக்கும் பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்தப் பச்சரிசி மாவையே திருநெல்வேலி மாவட்டக் கிராமங்களில் `துள்ளு மாவு’ என்கிறார்கள். உரலில் இட்டு இடிக்கும்போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகாதேவி கூழ் காய்ச்சிக் குடித்துப் பசியாறினாள்.
அதன்பின் சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள். அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து, “சக்தியின் அம்சம் நீ. மனித குலத்தைத் தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்தத் துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்குவாயாக” என்று வரம் அளித்து மறைந்தார். அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.
ஸ்ரீ ஏழுலோகநாயகி அம்மன்
இந்த நிகழ்ச்சி ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும் அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில் பக்தர்கள் வேண்டி வழிபடுகிறார்கள்.
ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி? – கழுகார் அப்டேட்ஸ்!
மகனுக்கு பதவி இல்லை… ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்!
சமீபத்தில் வெளியான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் மாற்றங்கள், நியமனம் பட்டியலில் தேனி இடம்பெறாதது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றைத் தனது இளைய மகன் ஜெயபிரதீப் கையில் கொடுத்து ஓ.பி.எஸ் அழகு
பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
பெண்களின் மிகப் பெரிய உலகம் தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாக பெண்கள் ஆண்களை விட உடல் வலிமை குறைந்தவர்கள் எனவே அவர்கள் சமையல் அறையில் சில வேலைகளில் ஈடுபடும் பொழுது அவர்களது உடல்களுக்கு
ராங்கால் நக்கீரன் 28-7-20
ராங்கால் நக்கீரன் 28-7-20
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்
நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண்